மதுராந்தகத்தில் அதிமுக கோட்டையை உடைச்சே ஆகணும்.. 7,194 கணக்கு இந்த முறை மிஸ் ஆகக்கூடாது.. மாண்புமிகுவிடம் முதல்வர் கறார்!

அதிமுகவில் செயல்பட்டு வரும் கனிதா சம்பத்துக்கு, தற்போது மதுராந்தகம் இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
cm vijay and EPS
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் நடந்த அரசியல் மாற்றங்களில் சில தொகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த நிலையில் அந்த தொகுதிகள் தற்போது காலியாக உள்ளது. இந்த நிலையில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 2ம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் தீவிர மக்கள் சந்திப்பிலும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுவருகின்னர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்றவர் மரகதம் குமரவேல். இவர் 69284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 7194 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் எழில் கேத்ரினை தோற்கடித்தார். பின்னர் தனது MLA பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். மரகதத்திற்கு துணைப் பொதுச் செயலாளர் மட்டுமின்றி இடைத்தேர்தலுக்கான சீட்டும்  வழங்கப்பட்டுள்ளது. 7194 வாக்கு வித்தியாசத்தில் தவெக தனது வெற்றி வாய்ப்பை இழந்தது, அதே இடத்தில் அதே வேட்பாளர் களமிறக்கி பெரிய கணக்கு போட்டுள்ளது தவெக.

2021 சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் தனது வலுவான வெற்றியை பதிவு செய்துள்ளது அதிமுக. அதைத்தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலிலும் சற்றும் தடுமாற்றம் இல்லாமல் 7194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய இடம் வேட்பாளர். இரு தேர்தலிலும் மரகதம் குமரவேல் நின்று பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். அதிமுகவை தவிர்த்து வேட்பாளரை மக்கள் ஏற்றுக் கொண்டாலும் இந்த தொகுதியில் தவெகவெற்றி பெற வாய்ப்புள்ளது. அப்படி இல்லாமல் மரகதம் ராஜினாமா செய்த அதிருப்தி நிலவினால், தங்களின் வலுவான கோட்டை என அதிமுக மீண்டும் நிரூபிக்கும் வாய்ப்புள்ளது.

அதனால் அதிமுக வேட்பாளர் தேர்வில் இந்த முறை மிகுந்த கவனமாக செயல்பட்டுள்ளது.  அதிமுக மகளிர் அணி மாநில இணைச் செயலாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான கனிதா சம்பத் மதுரந்தம் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சில காரணங்களால் சென்ற தேர்தல்களில் மரகதம் குமரவேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அதிமுகவில் செயல்பட்டு வரும் கனிதா சம்பத்துக்கு, தற்போது மதுராந்தகம் இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கனிதா சம்பத் கடந்த 1996-ம் ஆண்டு அதிமுக சார்பில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அதிமுக மாவட்ட பிரதிநிதி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். மேலும் கடந்த 2001-2006 காலகட்டத்தில் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியிலும், 2011 காலகட்டத்தில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே அதிமுகவுக்கு என்றுள்ள வாக்கு வங்கி மற்றும் கணித சம்பத் ஆதரவு வாக்குகள் மீண்டும் அதிமுகவை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக-வின் பொதுப்பணித்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா மதுராந்தகம் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டடுள்ளார்.  அதையடுத்து தேர்தல் பணிகளை முன்னின்று கவனித்து வருகிறார். மேலும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். தொடர்ந்து மக்கள் சந்திப்பு, குறைகேற்பு மற்றும் வேட்பளர்களுக்கு ஆலோசனை ஆகியவற்றை கவனித்து வருகிறர். இன்னும் சில நாட்களில் தவெக-வின் தலைவர் விஜய் பிரசத்தில் ஈடுபட உள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடுத்துவருகிறது. மூத்தவர் விஜயும் இந்த தொகுதியின் வெற்றியில் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. பெரும்பான்மையை நிறைவு ஏசியா ஒவ்வொரு தொகுதியும் முக்கியம் என்பதால் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட  தலைமை அறிவுறுத்தியுள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com