"காவல்துறையின் "BUILD UP" செய்தி.. ரத்தக்களறியான தமிழ்நாடு" - முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

"திரைப்படங்களின் நாள் வசூல் கணக்கை பார்ப்பது போல, ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் மூலை முடுக்குகள் எங்கும் நடைபெற்று கொண்டிருக்கும் கொலைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறாரோ? என்ற சந்தேகம் தான் எழுகிறது." - தினகரன்
Tamil Nadu Becomes a Bloodbath Amid Police "Build Up" News: TTV Dhinakaran Criticizes CM Vijay
"காவல்துறையின் "BUILD UP" செய்தி.. ரத்தக்களறியான தமிழ்நாடு" - முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
Published on: 
Updated on: 
2 min read

தமிழ்நாட்டில் தொடர்ந்து கொலை குற்றங்கள் நடந்து வரும் சூழலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் நிறுவனர் டிடிவி தினகரன், மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழும் நிலை இருப்பதால் முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரது பதிவில், "மெகா தொடர் போல நீளும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை - மக்களே முன்வந்து CLIMAX எழுதுவதற்குள் முதல்வர் விழித்துக் கொள்வாரா? அல்லது இது தான் தவெகவின் ஆறுமாத கால ஆட்சியின் சாதனை என பெருமையாக மார்தட்டிக் கொள்வாரா?

ஒருபுறம் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் ஆலோசனை, மறுபுறம் நூற்றுக்கணக்கான ரவுடிகள் காவல்துறையினரால் கைது என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த அதே நேரத்தில் சென்னை அபிராமபுரம், காசிமேடு, செம்பியம் என நேற்று மட்டும் மூன்று படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தீபாவளி தினத்தன்று நடைபெற்ற படுகொலைச் சம்பவங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்களுடன் ஒப்பிட்டு பதிலளித்த பட்டிமன்ற அமைச்சர், இடைவெளியின்றி அடுத்தடுத்த நாட்களில் அரங்கேறிக் கொண்டிருக்கும் படுகொலைகளுக்கு எந்த ஆண்டின் புள்ளி விவரங்களை தேடிக் கொண்டிருக்கிறார்?

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டிய பொறுப்பு மிக்க பதவியில் இருக்கும் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னையை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் திரைப்படங்களின் நாள் வசூல் கணக்கை பார்ப்பது போல, ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் மூலை முடுக்குகள் எங்கும் நடைபெற்று கொண்டிருக்கும் கொலைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறாரோ? என்ற சந்தேகம் தான் எழுகிறது.

TTV Dhinakaran angered by horse-trading allegations!
TTV Dinakaran

தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு அதிரடி காட்டி ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ரவுடிகள் கைது செய்யப்பட்டதாக "BUILD UP" செய்தி வெளியிட்ட அதே நேரத்தில் சென்னையில் ரவுடிகள் கொலை என்ற செய்தியும் இணைந்து வருவதை பார்க்கும் போது, காவல்துறை மீதான அதீத நம்பிக்கை, சட்டம் ஒழுங்கை போலவே சீர்கெட்டு போயிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

அன்றாடம் அரங்கேறும் வெட்டு குத்து, பழிக்குப் பழி, போன்ற படுகொலைச் சம்பவங்களால் ரத்தக்களறியாகவும், ரண கொடூரமான மாநிலமாகவும் தமிழகத்தை மாற்றி, பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் தங்களின் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவல நிலையை உருவாக்கியது தான் தவெகவின் ஆறு மாத கால ஆட்சியின் ஒரே சாதனையாக அமைந்திருக்கிறது.

எனவே, மக்களின் பாதுகாப்பு தான் அரசின் அடிப்படை கடமை அதனை பேணி காக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உண்டு. அதை விடுத்து வெற்று அறிக்கைகளும், செய்திக் குறிப்புகளும் வெறும் ஏட்டு சுரைக்காய் தான் என்பதை உணர்ந்து சட்டம் ஒழுங்கை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்." என பதிவிட்டுள்ளார்.

Tamil Nadu Becomes a Bloodbath Amid Police "Build Up" News: TTV Dhinakaran Criticizes CM Vijay
``'ஆந்திரா ரெட்டி கேங்கோடு' சேர்ந்து சினிமா நடிப்புக்கு தயாராகுங்கள் CM sir" MLA-கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய அப்பாவு!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.