
அதிமுக -வின் அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்.பி யுமான வி.மைத்ரேயன் அதிமுக -விலிருந்து விலகி சென்னை அறிவாலயத்தில் உள்ள
திமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் முன்னிலையில் திமுக -வில் இணைந்தார்.
அதிமுகவிலிருந்து வெளியேறியதற்கு அதிமுகவும் - பாஜகவும் இணைந்தது தான் முக்கிய காரணமாக நான் பார்க்கிறேன்” - மாலை முரசு தொலைக்காட்சிக்கு மைத்திரையின் தனி பேட்டி அளித்திருக்கிறார், அதில் அவர் பேசியதாவது,
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் இவ்வளவு கால தாமதமாக வந்தீர்கள்? என்று கேட்டார்... 2020லயே வந்திருக்க வேண்டும்.. பல காரணத்திற்காக அது தடைப்பட்டு விட்டது. ஐந்து ஆண்டுகள் கழித்து வந்திருக்கிறேன்.
நன்றாக செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்தார் திமுகவின் வெற்றிக்காக பாடுபடுவேன் என்றும் கூறினேன்.
எல்லா நிர்வாகிகளும் அதிமுகவில் புழுக்கத்தில் இருக்கிறார்கள். சந்தோஷத்தில் இல்லை அதிமுக கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லை.
தலைவர்கள் அனைவரும் கையை பிடித்து மேலே தூக்கி விட்டார்கள்..ஆனால் தொண்டர்கள் இல்லை.
எல்லா மாவட்டத்திலும் குழப்பம் இருக்கிறது நான் துணிந்து முடிவெடுத்து விட்டு வந்து விட்டேன்.
நான் எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் தான் வந்திருக்கிறேன் அடிப்படைத் தொண்டனாக பணியாற்ற வந்திருக்கிறேன். அதற்கு மேல் அவர்களுக்கு பொறுப்பு கொடுக்க விருப்பப்பட்டால் கொடுப்பார்கள்.
அதிமுகவிலிருந்து வெளியேறியதற்கு அதிமுகவும் - பாஜகவும் இணைந்து தான் முக்கிய காரணமாக நான் பார்க்கிறேன்.
இரு மொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு, கல்விக்கு நிதி ஒதுக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு மத்திய அரசு தமிழக அரசுக்கு நிதி ஒதுக்காமல் இருக்கிறது.
தமிழ்நாட்டிற்காக போராடிக் கொண்டிருக்க கூடிய தலைவர் பின் நிற்க வேண்டிய கட்டாயம் உள்ளது அதனால் திமுகவில் இணைந்தேன்.
இன்று தமிழ்நாட்டிற்கு தேவை மீண்டும் திமுக ஆட்சி அதில் என்னையும் இணைத்துக் கொள்வதற்காக வந்திருக்கிறேன்.
முதலமைச்சர் என்ன ஆணையிடுகிறாரோ அதன்படி தேர்தலில் செயல்படுவேன் என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.