“தொண்டர்களுக்கு வார்னிங் கொடுத்த விஜய்” - தவெகவில் ஒரு தலைமை மட்டும் தான்.. பவர் சென்டர்களுக்கு அனுமதி இல்லை என காட்டம்!

அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறிவிப்பாக பார்க்கப்படுகிறது...
vijay tvk
vijay tvk
Published on
Updated on
1 min read

இன்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு உரையாற்றினார். அதில் “இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள் அதேபோல கொஞ்சம் அவகாசமும் கொடுங்கள். பெண்களின் பாதுகாப்பை மிக கடுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வேன். போதை பொருள் கலாச்சாரத்தை தடுத்து நமது பிள்ளைகளை அதில் இருந்து வெளியில் கொண்டுவருவேன். இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான்.. என்னுடன் இருப்பவர்களையும் தப்பு செய்ய விடமாட்டான்.. இங்கு யாருக்காவது நாம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டோம் ஒரு ஆட்டம் ஆடி பாப்போம் என நினைத்திருந்தால் அந்த எண்ணத்தை அடியோடு கைவிட்டுவிடுங்கள்.

இங்கு ஒரு தலைமை, ஒரு சென்டர் மட்டும் தான் அது என் தலைமையிலான சென்டர் மட்டும் தான்.. இந்த பக்கம் ஒரு பவர் சென்டர் அந்த பக்கம் ஒரு சென்டர் என்பது கிடையாது அதை கண்டிப்புடன் சொல்கிறேன்.” என கூறி தனது அரசாங்கத்தில் இரட்டை அதிகார மையங்களுக்கு இடமில்லை என்பதைக் கடுமையான எச்சரிக்கை தொனியில் தெரிவித்துள்ளார். இத மூலம் அவர் கட்சிக்குள்ளோ அல்லது ஆட்சிக்குள்ளோ தனித்தனி அதிகார குழுக்கள் உருவாக அனுமதிக்க மாட்டேன் என்று தெளிவுபடுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் கடந்த காலங்களில் பல கட்சிகளில் “Power Center” அரசியல் மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தியது.

தலைமை ஒரு பக்கம் இருந்தாலும், முடிவுகளை கட்டுப்படுத்தும் மறைமுக மையங்கள் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்த சம்பவங்கள் ஏராளம். அந்த பின்னணியில்தான் விஜய்யின் இந்த பேச்சு தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. “இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான்.. என்னுடன் இருப்பவர்களையும் தப்பு செய்ய விடமாட்டான்” என்ற அவரது வரிகள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

ஆட்சிக்கு வந்தவுடன் அதிகாரத்தை பயன்படுத்தி தனிப்பட்ட ஆதிக்கம் செலுத்த நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் விஜய்யின் அந்த பேச்சு வெளிப்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், “வெற்றி பெற்ற உடன் ஒரு ஆட்டம் ஆடி பாப்போம் என நினைத்திருந்தால் அந்த எண்ணத்தை கைவிடுங்கள்” என்று விஜய் பேசியிருப்பது, வெற்றியின் உற்சாகத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்ய நினைக்கும் கட்சி நிர்வாகிகளுக்கான நேரடி மெசேஜாகவே பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com