நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்டமான பதவியேற்பு விழாவில், பொறுப்பு ஆளுநர் அர்லேகருக்கு முன்னிலையில் அவர் முதலமைச்சராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். கடந்த நான்கு நாட்களாக விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த வரலாற்று நிகழ்வு தற்போது நடைபெற்றது.
118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தனது பெரும்பான்மையை நிரூபித்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆட்சியை அமைக்கும் வகையில் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். “ஜோசப் விஜய் ஆகிய நான்...” என்று தொடங்கி அவர் எடுத்த உறுதிமொழி அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.விஜய்யுடன் சேர்ந்து மொத்தம் 9 அமைச்சர்களும் இன்று பதவியேற்று உள்ள நிலையில், அவருடன் சேர்ந்து ஆனந்த், ஆதவ் அர்ஜுனன், செங்கோட்டையன், வெங்கட்ராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களின் பாதுகாப்பு சிங்க பெண் சிறப்பு அதிரடிப்படை, மற்றும் மாநகரம், நகரம் தோறும் போதை பொருள் தடுப்பு படை அலகுகள் ஆகிய முக்கிய மூன்று திட்டங்களை நிறைவேற்றும் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய விஜய் “சினிமாவில் எனக்கு மிக பெரிய இடம் கொடுத்தீர்கள். அதே போல உங்களுக்கு நன்றி கடன் செலுத்த வந்த எனக்கு அரசியலில் இடம் கொடுத்திருக்கிறீர்கள்.
நான் முன்பே சொன்னது போல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து உங்களை ஏமாற்ற மாட்டேன். முடிந்ததை செய்வேன்.. இன்று தமிழ்நாடு அரசாங்கம் 10 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு, தூக்க முடியாத சுமையை வைத்துவிட்டு சென்றுள்ளார்கள். உள்ளே சென்று பார்த்தல் தான் தெரியும் அதை பற்றி உங்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என நன் நினைக்கிறன். இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள் அதேபோல கொஞ்சம் அவகாசமும் கொடுங்கள். பெண்களின் பாதுகாப்பை மிக கடுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வேன்.
போதை பொருள் கலாச்சாரத்தை தடுத்து நமது பிள்ளைகளை அதில் இருந்து வெளியில் கொண்டுவருவேன். இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான்.. என்னுடன் இருப்பவர்களையும் தப்பு செய்ய விடமாட்டான்.. இங்கு யாருக்காவது நாம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டோம் ஒரு ஆட்டம் ஆடி பாப்போம் என நினைத்திருந்தால் அந்த எண்ணத்தை அடியோடு கைவிட்டுவிடுங்கள். இங்கு ஒரு தலை மட்டும் தன அது என் தலைமையிலான சென்டர் மட்டும் தான்.. இந்த பக்கம் ஒரு சென்டர் அந்த பக்கம் ஒரு சென்டர் என்பது கிடையாது அதை கண்டிப்புடன் சொல்கிறேன்.” என கூறி ஆதரவளித்த கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.