

கரூரில் தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் தற்போது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி கரூர், வெண்ணைமலை அட்லஸ் கலையரங்கம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. முதல்வர் விஜய் இன்று பேசியதும் பிரசாரத்தில் பேசிய நடைமுறையையே மீண்டும் கையாள்வது போல உள்ளது. கரூர் சம்பவத்தை பற்றி பேச திமுகவிற்கு திராணி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தீய சக்தியை பற்றி, அவர்களின் நிர்வாகம் பற்றி, ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதை Short-ஆ சொல்ல வேணும்னா, ஓட்டை பாத்திரத்துல தண்ணிய ஊத்தரா மாறி தான் என்று குறிப்பிட்டார்.
சட்டமன்றத்தில், திமுகவினர் வாயை தொறங்க CM சார் என்று பேட்ஜ் அணிந்து வந்ததை குறித்து பேசிய முதல்வர், "உங்கள் CM-யை நெஞ்சிலையே குத்திட்டு வந்திங்க பாருங்க” என்றும் "பேசுங்க பேசுங்கனு சொல்றீங்க பேசுனா எழுந்து ஓடுறிங்க, இனிமே பேச ஆரம்பிப்பதற்கு முன், எல்லா டோரையும் இழுத்து lOCK பண்ணுங்க என்று பேரவை தலைவரிடம் கேட்க வேண்டும்" என குறிப்பிட்டார். மேலும் "நான் 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள், இதற்கு மேல் பேசினால் மொத்தமா முடிஞ்சிரும் பார்த்துக்கோங்க” என்று கிண்டல் செய்யும் விதமாக பேசி இருந்தார். நாம அரசியல் பேசினா விஜயெல்லாம் அரசியல் பேசலாமா? என்பது, பேசாமல் இருந்தால் விஜய்க்கு அரசியாலே பேச தெரியவில்லை என்பது” என்றும் 'Talk less Work more' என்பது தான் நம்ம பாலிஸி” என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்த தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேற வேற இல்ல, இரண்டுமே கூட்டு களவாணிகள் தான்” என்றும் திமுக மற்றும் அதிமுக வை நேரடியாக சாடியுள்ளார் முதல்வர் விஜய்.
எங்களை பார்த்து, சோபா மாடல் வாஷிங் மெஷின் என்றெல்லாம் சொல்கிறார்கள் ஆனால் அரசியல் வியாபாரம் செய்வதற்கான வெண்டிங் மெஷினே திமுக தான் என்றும் தெரிவித்தார். திருட்டு திமுக ஆட்சியை வைத்து கொண்டு ஊரை அடித்து உலையில் போட்டுகொண்டு, இப்போது பாரிங்ன் ஓடிட்டாங்க.. நான் ஸ்டாலின் சாரை சொல்லவில்லை, எனக்கு எப்போதும் ஸ்டாலின் சார் மேல தனி பாசம் உள்ளது.
இன்னுமும் திமுக தான் ஆட்சியில் உள்ளது போல என்னை கரூருக்கு போக கூடாதுனு சொல்லிட்டு இருங்காங்க, இன்னும் கனவுளையே இருக்கீங்களா.. முழிச்சு வாங்க… ரியாலிட்டிக்கு வாங்க.. உங்க ஆட்சிலா வீட்டுக்கு போய் ரொம்ப நாளாச்சு. என்றும் திமுகவை விமர்ச்சித்தார். மேலும் “இதெல்லாம் விட்டுவிட்டு நல்ல அரசியல் பண்ணுங்க” என்றும் “இதெல்லாம் உங்களுக்கு தெரியாது” என்றும் கிண்டல் செய்துள்ளார். திமுக திருந்த போவதில்லை மக்களே, இடைத்தேர்தலில் இவர்களை வச்சு நல்ல செஞ்சு விடுங்க என்று கேட்டுக்கொண்டுள்ளார். உரையின் இறுதி வரை திமுகவை விமர்ச்சிப்பதையே வழக்கம் போல் உரையை நிகழ்த்தியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.