150 ஆண்டுக்கு பின் வரும் பூரண சூரிய கிரகணம்....! 

150 ஆண்டுக்கு பின் வரும் பூரண சூரிய கிரகணம்....! 
Published on
Updated on
1 min read

150 ஆண்டுக்கு பின் வரும் பூரண சூரிய கிரகணம் நாளை தோன்ற  இருக்கிறது  எனவானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகணமானது, முதலில் வளைய சூரிய கிரகணமாக தோன்றி பின்னர் சந்திரனால் சூரியன் முழுமையாக மறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் குறுக்கிடும்போது ஏற்படும் நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும். வழக்கமாகத்  தோன்றும் கங்கன சூரிய கிரகணம், வளைய கிரகணம் என வரும்  சூரிய கிரகணங்களுக்கு  மாற்றாக  150  ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் பூரண சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது.

இந்த கிரகணம், இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.34 மணி முதல் 6.32 வரை இந்த கிரகணம் ஏற்படுவதால் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் முழுமையாக  பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது. 

அதே சமயம் ஆஸ்திரேலியா, பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் இந்த கிரகணம் நன்றாக தெரியும் எனவும்  கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தென்கிழக்கு ஆசியா, இந்தியப் பெருங்கடல் பகுதி, அண்டார்டிக்கா ஆகிய பகுதிகளில் குறைந்தபட்சம் பகுதி கிரகணமாக பார்க்க முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வளைய சூரிய கிரகணமாக தோன்றும் இந்த கிரகணம் முழு வளைய கிரகணம் தோன்றுவதற்கு முன், சந்திரனால் சூரியனை முழுமையாக மறைக்கப்பட்டு முழு சூரிய கிரகணமாக தோன்றி பின்னர் வளைய கிரகணமாக மீண்டும் மாறும் எனக்  கூறப்படுகிறது.  

பூர்ண சூரிய கிரகணம் என அழைக்கபடும் இந்த வகை கிரகணம் இனி 2172 ஆம் ஆண்டே தோன்றும் என தெரிவிக்கபட்டுள்ளது.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com