“24 குடும்பத்திற்கும் சாரி சொல்லணும்” - முதலமைச்சர் பதவி எதற்கு சார்.. போராட்டத்தில் ஸ்டாலினை சாடிய விஜய்!

அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும்
“24 குடும்பத்திற்கும் சாரி சொல்லணும்” - முதலமைச்சர் பதவி எதற்கு சார்.. போராட்டத்தில் ஸ்டாலினை சாடிய விஜய்!
Published on
Updated on
1 min read

இன்று சேப்பாக்கம் சுவாமி சிவானந்த சாலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் சிவகங்கை திருபுவனத்தில் போலீசாரால் உயிரிழந்த அஜித் குமார் மற்றும் இதுவரை தமிழகத்தில் நடந்த லாக்கப் மரணங்களுக்கு நீதி கேட்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதில் கட்சியின் தலைவர் மற்றும் நடிகர் விஜய் கலந்து கொண்டு லாக்கப் மரணங்கள் குறித்து உரையாற்றினார்.

அதில் “சாரி சொன்னது சரி தான் சிஎம் சார் ஆன சாரி மட்டும் பத்தாது நீதியும் கிடைக்கணும், இதுவரை உங்கள் ஆட்சியில் 24 லாக்கப் மரணங்கள் நடந்து இருக்கு அஜித் குமாரின் குடும்பத்திற்கு கொடுத்த மாதிரி 24 குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக வழக்கில் தொடக்கி இன்று அஜித் குமார் வழக்கு வரை உங்கள் ஆட்சியில் எத்தனை அட்ராசிடிகள்? அனைத்திலும் நீதிமன்ற தலையிட்டு கேள்வி கேட்கிறது, அப்போது இந்த அரசு எதற்கு, சிஎம் பதிவு எதற்கு, சாத்தான்குளம் வழக்கு சிபிஐ -க்கு மாற்றப்பட்டது காவல் துறைக்கு அசிங்கம் என சொன்னீர்கள்.

அப்போ இதுவும் அசிங்கம் தானே, எதற்கு பயந்து மதிய அரசிடம் சென்று ஒளிந்து கொள்கிறீர்கள், கண்டிப்பாக அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும் அதற்கு தமிழக வெற்றி கழகம் மக்களோடு நின்று போராடும், நீங்கள் செய்த தவறுக்கு எல்லாம் உங்கள் ஆட்சி முடிவதற்குள் சட்ட ஒழுங்கை சரி செய்து விடுங்கள், இல்லையென்றால் தமிழக வெற்றி கழகம் சரி செய்ய வைக்கும்” என கூறி பேசியுள்ளார்.

இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தவெக தொண்டர்கள் மற்றும் சில லாக்கப் மரணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக நீதிமன்றத்தில் அஜித் குமாரின் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com