முதன்முறையாக விஜய்யை நேரடியாக இறங்கி அடித்துள்ள உதயநிதி! சற்றும் எதிர்பார்க்காத த.வெ.க! இனி நேரடி அட்டாக் தான் போல...

நான் வாரத்தில் 5 நாள் வெளியூரில், மக்களுடன் தான் இருப்பேன். நான் சனிக்கிழமை சனிக்கிழமை மட்டும் வெளியில் வரக்கூடிய...
vijay-and-udhayanidhi-stalin
vijay-and-udhayanidhi-stalin
Published on
Updated on
2 min read

சட்டமன்ற தேர்தல் முடியும் வரை தமிழகத்தின் அரசியல் களம் பரபரப்புடனே இயங்கும். இதுவரை காணாத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த தேர்தலின் தனித்துவத்தை உறுதி செய்தவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான். இதுவரை அதிமுக - திமுக என்ற இரண்டு பிராந்திய கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த நிலை சற்று மாறியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி துவங்கிய விஜய் திமுக -எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியிலிருந்து தனது அரசியலை முன்னெடுத்தார். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது பல கட்ட விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவர் அனைத்தையும் கடந்து 2 மாநில மாநாடுகளை நடத்தி முடித்திருக்கிறார்.

விக்ரவாண்டியில் நடத்தப்பட்ட வி சாலை மாநாடும் சரி, மதுரை பாரபத்தி மாநாடும் சரி மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபித்தன.

விமர்சனமும் பதிலும்..

தமிழக வெற்றி கழகம் மீது இரண்டு மிக முக்கியமான விமர்சனங்கள் இருக்கின்றன. வேறு சில விமர்சனமும் உள்ளன. ஆனால் அவை எல்லா காட்சிகளிலும் உள்ள பொதுவான விமர்சனம்தான் ஆனால் 

1.விஜய் மக்களை நேரடியாக சந்திக்கவில்லை…களத்தில் நிற்கவில்லை 

2. விஜய் கட்சியின் தொண்டர்கள் பக்குவப்படாமல், அரசியல்படுத்தப்படாமல் இருக்கின்றனர் 

ஆகிய இரு விமர்சனங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் விஜய் எப்படி கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன் விளைவாகத்தான் விஜய் மக்கள் சந்திப்பை முன்னெடுத்திருக்கிறார். கடந்த இரண்டு வாரங்களாக விஜயமக்களி சந்தித்து வருகிறார். அவர் ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும் எங்கு ஏகோபித்த வரவேற்பை பெறுகிறார்.

ஆனால் இரண்டாவது விமர்சனம் ஒரு நாளில் சரியாகும் ஒன்று அல்ல.. அவரின் ரசிகர்கள் நம்பிக்கைக்குரிய தவெக தொண்டர்களாக மாற நீண்ட நாட்கள் ஆகும்.

ஆனால் ஆயிரம் விமர்சனங்களையும் கடந்து விஜய் முன்னேறிக்கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம் திமுக எதிர்ப்பு.

விஜய் சரியான நேரத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.  கிடைக்கும்  இடங்களில் எல்லாம் அவர் பேசுவது வெறும் திமுக எதிர்ப்புதான், அவர் பாஜக, அதிமுக -ஆகிய கட்சிகளை விமர்சித்தாலும் திமுக அளவிற்கு அவர் யாரையும் சாடியதில்லை. முன்னதாக நடந்த விக்கிரவாண்டி மாநாட்டில், மன்னராட்சி, ஊழலில் திளைத்த கட்சி என காத்திரமாக விமர்சித்திருந்தார்,

அதற்கு அடுத்து வந்த, மதுரை மாநாட்டில் “stalin Uncle” கேக்குதா? என பேசி மு.க.ஸ்டாலின் உருவாக்கி வைத்திருந்த “அப்பா” இமேஜை உடைத்துவிட்டிருந்தார். இப்படி தொடர்ச்சியாக விஜய் கால் வைக்கும் இடங்களில் எல்லாம் திமுக -விற்கு எதிரான விமர்சனங்களையே முன்னெடுத்து வருகிறார்.

அதிலும் கடந்த நாகப்பட்டினம் - திருவாரூர் பரப்புரையின்போது அவர் பேசிய கருத்துக்கள் மேலும் வைரலாகின. விஜய்யின் இந்த அதிரடிப் பேச்சு, தமிழக அரசியலில் சில முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் விஜய் -க்கு திமுக தன்னால் முடிந்த இடையூறுகளை ஏற்படுத்துவதாகவே தெரிகிறது. அவரின் பரப்புரைக்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடிப்பது, தவெக -விற்கு மட்டும்  அதிக  நிபந்தனைகள் விதிக்கப்படுவது, பேணா வைத்ததற்கு வழக்கு என்று பல இக்கட்டுகள் உருவாக்கப்படுவதாக தவெக -தரப்பு சொல்கிறது. 

அதெற்கெல்லாம் சேர்த்துதான் விஜய் திமுக -வை கடுமையாக விமர்சிக்கிறார். ஆனால் இதுவரை திமுக தரப்பில் முதல்கட்ட தலைவர்கள் யாரும் விஜய் -ன் விமர்சனத்துக்கு பதில் அளிக்காமல் இருந்தனர், ஆனால் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் “நான் வாரத்தில் 4 நாள் வெளியூரில், மக்களுடன் தான் இருப்பேன். நான் சனிக்கிழமை சனிக்கிழமை மட்டும் வெளியில் வரக்கூடிய ஆள் இல்லை” என சொல்லி விஜய் சனிக்கிழமையில் மட்டும் பரப்புரை செய்வதை சூசகமாக விமர்சித்துள்ளார்.

திமுக -விலிருந்து எந்தவித பதிலடியும் விஜய்க்கு எதிராக வராமல் இருந்த சூழலில், திடீரென உதயநிதி இப்படி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்துக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com