“என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? Sleep Mode-லிருந்து வெளியே வருவாரா முதலமைச்சர்?” - முதல்வரை சரமாரியாக விமர்சித்த உதயநிதி!

நள்ளிரவில் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில்...
udhayanidhi vs cm vijay
udhayanidhi vs cm vijay
Published on: 
Updated on: 
1 min read

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலை, கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. இன்று தூத்துக்குடியில் வாலிபர் வீட்டுக்குள் புகுந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி பெண்ணை கொலை செய்து , சிறுமிகளை கடத்தி சென்றார். மேலும் நகை வன்கொடுமைகள், கல்லூரி மாணவியிடம் தமிழக வெற்றி கழக நிர்வாகி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் ஆகிவற்றிற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் “என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? Sleep Mode-லிருந்து வெளியே வருவாரா முதலமைச்சர்? தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில், மேரி ரெஜிலா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தக் கொடூர தாக்குதலில் அந்தப்பெண்ணின் கணவரும், மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த பெண்ணின் 2 மகள்களையும் அந்தக்கும்பல் கடத்தியுள்ளது. சில மணி நேரத்துக்குப் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, வேளாங்கண்ணியில் வீட்டை விட்டு வெளியேறி வந்த 2 சிறுமிகளை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும், திருநெல்வேலியில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய இன்னொரு சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமையும் நடந்திருக்கிறது. மேலும், த.வெ.க.வின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர், கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இந்த SofaModel ஆட்சி அமைந்தது முதல், ஆளுங்கட்சியில் பாலியல் குற்றவாளிகள் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கிற அளவுக்கு, பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிகிறார்கள். ஆனால், இவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது தான் முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு லட்சணமா? ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் Reels Shoot செய்யும் Dummy CM, எப்போது தான் குற்றங்களைக் கட்டுப்படுத்துவார்? இந்தக்குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என கடுமையாக கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com