“விஜய்யின் காலடியில் விழுந்து கிடக்கிறார் வைகோ” - கல்லறைக்குள் சென்று கொண்டிருக்கிறதா கட்சி?.. நாஞ்சில் சம்பத் கட்டமான விமர்சனம்!

சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் கையில் இருந்த டார்ச்சை அறிவாலயத்தின் திண்ணையில் தேடி கொண்டிருப்பதாகவும்
நாஞ்சில் சம்பத்
Published on
Updated on
2 min read

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான N. ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு தவெக விழுப்புரம் தெற்கு உறுப்பினர்கள் சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் தவெக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு உரையாற்றி பொது மக்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் ஏராளமான கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது மேடையில் பேசிய நாஞ்சில் சம்பத், “விழுப்புரத்தில் மண் திருடன் பொன்முடி நான் விழுப்புரம் வரக்கூடாது என செயல்பட்டு வந்தார். அவர் சிறைக்கு செல்ல உள்ள நிலையில் தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் வந்துள்ளேன்” என்று முன்னாள் அமைச்சர் பொன்முடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்தார். மேலும் “இந்திய வரலாற்றில் புதிதாக கட்சி தொடங்கி மூன்று ஆண்டு காலம் முடிவதற்கு முன்பே அதிகாரத்திற்கு வந்து அசத்தி சாதனை படைத்த தவெக தலைவர் விஜய் தான் அதிசயம்” என தெரிவித்தார்.

1993 ஆம் ஆண்டு  அரசியல் மாற்றத்திற்கு அகரமிட்ட வைகோ அவராலே அதை செய்ய முடியவில்லை. அவரே இன்று விஜய்யின் காலடியில் வந்து விழுந்து கிடப்பதாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கைகோர்த்து கல்லறைக்குள் போய்விட்டதாகவும், தேமுதிகவை தொடங்கிய விஜய்காந்தின் கட்சியை பிரேமலதா திமுகவிற்கு 5 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டுள்ளதாக விமர்சித்தார். உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் மாற்றம் வேண்டும் என்று திமுகவின் மீது வெறுப்பினை கக்கி தொலைக்காட்சி பெட்டியை உடைத்து மக்கள் நீதி மய்யத்தை தொடங்கி ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் கையில் இருந்த டார்ச்சை அறிவாலயத்தின் திண்ணையில் தேடி கொண்டிருப்பதாகவும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

தொடர்ந்து பேசிய நாஞ்சில் சம்பத், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை விமர்சித்து பேசினார். “நாம் தமிழர் என்று தமிழ் தேசியம் பேசிய சில்லறை பையன் சீமான் பிரபாகரன் உடன் சாப்பிட்டு இருக்கிறேன் என பொய் கூறி தமிழர்களை ஏமாற்றி பல்லாயிரம் கோடிகளை தேடி கொண்டதாகவும், சீமான் பெரியாரை அவமதித்து அண்ணாவை கேவலமாக பேசி திராவிடத்தை பழிக்கிறேன் என கூறி தான் தொடங்கிய கட்சியை நடத்த முடியாமல் திண்டாடுவதாகவும், திமுகவில் உள்ள அனிதா ராதாகிருஷ்ணன் தாய்மாமன் சீரினை சீமானுக்கு  கொண்டு  செல்கிறார், அதனை வெட்கமே இல்லாமல் வாங்கி கொள்வதாகவும், தவெக வருகையால் நாம் தமிழர் கட்சி கல்லறைக்குள் போய் கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

“தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி உயிரோடு இருக்காது” என்றும் அக்கட்சியை பாடையில் வைத்துள்ளதாகவும் காட்டமாக பேசினார். தவெக ஆட்சி அமைந்து விடக்கூடாது என அதிமுக ஆட்சி அமைய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஸ்டாலின் பிச்சை கேட்டதாக தெரிவித்தார். மதச்சார்பற்ற அணி தான் தமிழ்நாட்டை ஆள முடியும் பாஜக ஆட்சி கொள்ளை புறமாக நடைபெற நினைத்ததை தவிடு பொடியாக்கி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தவெக ஆட்சியில் என்ன குறை கண்டீர்கள்? என்ன குற்றம் செய்தோம்? இன்றைக்கும் தவெக ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென பேசுகிறார்கள். ஆறு மாதத்தில் தவெக ஆட்சி முடிவிற்கு வந்துவிடும் என ஸ்டாலின் பேசுகிறார். அவருடைய சர் புத்திரன் ஒன்றிற்கும் உதவா உதயநிதி உளரி கொட்டுவதாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் கட்சி, காங்கிரஸ் தமிழக வெற்றி கழகத்திற்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று தெரிவித்ததே இல்லை. எந்த கணக்கில் ஆட்சி கவிழும் என்று சொல்கிறார்? முட்டாள்களின் சொர்க்கத்தில் உள்ள ஸ்டாலின் ஏழு தலைமுறைக்கு திமுக ஆட்சி வராது. தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் காட்டமாக திமுகவை சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி, அன்பில் மகேஷ் குறித்தும் விமர்ச்சனத்திற்குரிய கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com