" பாஜகவால் அரசியல் அடையாளம்.." வானதி ஸ்ரீனிவாசன் அண்ணாமலையை சீண்ட காரணம் என்ன?

அண்ணாமலை நேற்றைய தினம் மீண்டும் தான் CJP போராட்டங்களுக்கு ஆதரவளிக்கவில்லை, ஆனால் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நியாயமாக பதிலளிக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தார்.
Why did Vanathi Srinivasan tease Annamalai?
" பாஜகவால் அரசியல் அடையாளம்.." வானதி ஸ்ரீனிவாசன் அண்ணாமலையை சீண்ட காரணம் என்ன?
Published on: 
Updated on: 
2 min read

We The Leaders அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, பாஜக அரசு டெல்லி போராட்டங்களைக் கையாளும் முறை குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

CJP அமைப்புக்கு ஆதரவளிக்கவில்லை என்று கூறும் அவர், அந்த அமைப்புக்கு பாஜக அரசுதான் விளம்பரம் தேடித் தருவதாகப் பேசியுள்ளார். மேலும், எதிர்த்துக் கேள்வி கேட்கும் அனைவரையும் "தேச விரோதிகள்" என முத்திரை குத்துவது சலிப்பாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலையின் இந்தப் பதிவுக்குத் தீவிரமாக எதிர்வினையாற்றியுள்ளது பாஜக. தமிழக பாஜக சார்பில் செய்தித் தொடர்பாளர் நாராயண திருப்பதி விளக்கமான பதிலளித்தார்.

இந்த நிலையில் பாஜக மூலமாக அடையாளம் பெற்ற அண்ணாமலை பாஜகவை கேள்வி கேட்பதை மறைமுகமாக விமர்சித்துள்ளார் வானதி ஸ்ரீனிவாசன்.

அவர் வெளியிட்ட பதிவில், "'நாங்கள் தேசியத்திற்கு அத்தாரிட்டி' என்று ஒவ்வொரு கட்சியும் சொல்ல வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம்.

முன்பெல்லாம், காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள், "தேசியத்திற்கு பாஜக மட்டும் தான் அத்தாரிட்டியா, பாஜகவை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச விரோதியா?" என்று பாஜகவினரை நோக்கி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

அதே கேள்வியை, இப்போது, பாஜகவால் அரசியல் அடையாளம் பெற்று, வெளியேறியவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜக ஒருபோதும், 'தேசியத்திற்கு, இந்துத்துவத்திற்கு அத்தாரிட்டி' என்று சொன்னதில்லை. சொல்லப் போவதும் இல்லை. ஆனால், 'தேசியத்திற்கு, இந்துத்துவத்திற்கு பாஜக தான் அத்தாரிட்டி' என்பது, தேச விரோதிகளுக்கு தெரிந்திருக்கிறது.

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும், 'நான் தேசியவாதி' என்றும், இந்தியாவில் செயல்படும் கட்சிகள், அமைப்புகள் அனைத்தும், 'நாங்கள் தேசியவாதி' என்றும் உணர வேண்டும். 'தேசியத்துக்கு நாங்கள் தான் அத்தாரிட்டி' என்று ஒவ்வொரு கட்சியும் சொல்ல வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பம்.

1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி மும்பையில் பாஜக தொடங்கப்பட்டது. தொடக்க விழாவில் பேசிய பாஜகவின் முதல் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய், 'Nation First; Party Next; Self Last' என்பதுதான் பாஜகவின் கொள்கை என்று பிரகடனம் செய்தார். ஒவ்வொரு பாஜக தொண்டரின் உயிர்மூச்சும் இதுதான். பாஜகவினருக்கு எல்லாவற்றையும் விட தேசம் தான் முக்கியம்." எனக் கூறியுள்ளார்.

அண்ணாமலை நேற்றைய தினம் மீண்டும் தான் CJP போராட்டங்களுக்கு ஆதரவளிக்கவில்லை, ஆனால் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நியாயமாக பதிலளிக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தார். We The Leaders அமைப்பு உள்ளாட்சி தேர்தலை நோக்கி நகர்ந்துவரும் சூழலில் பாஜகவுக்கு எதிராக அண்ணாமலை தொடர்ந்து பேசிவருக்கிறார்.

தவெக, திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இருந்து தொண்டர்களைப் பிரிப்பதைவிட, ஏற்கெனவே தன்னைப் பின்பற்றி வந்த பாஜக தொண்டர்களைத் தன்பக்கம் இழுக்க அண்ணாமலை தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் பாஜக மூலம் தமிழக மக்களிடையே பிரபலமான முகமாக உருவெடுத்தவர் அண்ணாமலை. இப்போது பாஜகவின் கட்டமைப்பின் ஒரு பகுதியைத் தனக்காக எடுத்துச் செல்கிறாரோ என்ற அச்சம் தமிழக பாஜகவில் எழுந்துள்ளது. இதுவே அவரது விமர்சனங்களுக்குப் பாஜக விளக்கமாகப் பதிலளிக்கக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

வானதி சீனிவாசன் தனது பதிவில் அண்ணாமலையை திமுக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகளின் வரிசையில் நிறுத்துகிறார்.

Why did Vanathi Srinivasan tease Annamalai?
“13 வயது பெண்ணைக் கர்ப்பமாக்கிவிட்டுக் கைவிடக் கூடாது.. நான் லவ்வுக்கு எதிரி கிடையாது!” – சர்ச்சையான உ.பி. ஆளுநரின் பேச்சு!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com