“அவ்வளவுதான்.. முடிச்சு விட்டாங்க போங்க..” வேல்முருகன் மீது பாயும் வழக்கு..! எம்.எல்.ஏ பதவிக்கு வேட்டுதானா?

வேல்முருகன் மீது பல காவல்நிலையங்களில் புகாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் சிறுமிகளை ஆபாசமாக பேசியதற்காக...
vijay and  velmurugan
vijay and velmurugan
Published on
Updated on
2 min read

கல்வித்திருவிழா 

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்து வருகிறார். இந்த நிலையில் 2025 கல்வி ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதில் 600 மாணவ மாணவிகளுக்கு (மே 30) அன்று விருது வழங்கப்பட்டது.  விஜய்யை சந்திக்க வரும் மாணவர்கள் விஜயோடு குழு புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். மேலும் ஹார்ட்டின் சிம்பல் காட்டுவது, விஜய் படங்களில் வருவது போல போஸ் கொடுப்பது, கட்டி பிடிப்பது, டான்ஸ் ஆடுவது அன்பு மிகுதியால் முத்தம் கொடுப்பது என மாணவ மாணவிகள்  விஜயின் மீதான தங்கள் அன்பை இவ்வாறு வெளிப்படுத்தி வந்தனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வேல்முருகனின் கொச்சையான விமர்சனம் 

இந்த நிலையில்தான்  விஜய்யின் இந்த மாணவர் சந்திப்பை மோசமாக விமர்சித்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி  தலைவரான வேல்முருகன். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது .."இரண்டு கிராம் பரிசு கொடுத்த உடனே.. நம்ம முட்டாப் பயலுக.. நான் நடிகனை குறை சொல்ல மாட்டேன். ஒரு வயசு பொண்ண கூட்டிட்டு போறான். இன்னும் ஓரிரு மாதங்களில் பிளஸ் டூ முடித்து, டிகிரி முடிக்க இருக்கும் கல்லூரி பெண்களை கூட்டிட்டு போறாங்க.. அறிவு வேண்டாம் தமிழனுக்கு.. பெற்று வளர்த்து ஆளாக்கிய பெண்ணை, நாளை மாற்றான் வீட்டுக்கு மனைவியாக போகிற பெண்ணை.. அப்பா, அம்மா, ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் இருக்கும்போது. ஒரு சினிமா கூத்தாடி பயல கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்க அனுமதிக்கிறாங்க. இது என்ன ஈனப்பிறவி. தமிழனுடைய பிறவியா இது. அப்படியே விஜய் அண்ணான்னு சொல்றாங்க.. விஜய் நடிப்பதை ரசிங்க, நடிச்சா பாராட்டுங்க.. ஆனால் இப்படி செய்யக்கூடாது” என அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. 

பாய்கிறதா போக்சோ..!?

இந்த கருத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் வலுத்தன, த.வெ.க உள்ளிட்ட பல காட்சிகள் வேல்முருகனின் பேச்சுக்கு எதிரிப்பு தெரிவித்தனர். இந்நிலையில்தான் வேல்முருகன் மீது பல காவல்நிலையங்களில் புகாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் சிறுமிகளை ஆபாசமாக பேசியதற்காக தமிழக வெற்றிக்கழகத்தின் சட்ட ஆலோசனைக்குழு மூலம் தேசிய குழந்தைகள்  நல ஆணையத்தில் ஆன்லைன் மூலமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஆநிஐம் ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் இதனை முகாந்திரமாக கொண்டு வேல்முருகன் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யலாம், அதிகபட்சமாக அவர் மீது போக்சோ வழக்கு வரை பதிவு செய்ய வாய்ப்புள்ளது. ஒருவேளை அவர் மீது போக்சோ பாய்ந்தால் அவர் பதவிக்கு நிச்சயம் ஆப்புதான்..

உண்மையில் அவர் அந்த கருத்தை பேசிய விதம் முற்றிலும் தவறுதான்.. அதிலும் அவர் சிறுமிகளையும், அவர்கள் பெற்றோரையும் இழிவு படுத்தும் வகையில் அந்த காணொளியில் பேசியிருப்பார்.. அரசியலில் மிக முக்கியம் கண்ணியம்.. இன்றைய சூழலில் நம்மால் அதை பெரிதும் பார்க்க முடியவில்லை என்றாலும் பொதுவெளியில் பேசும்போது இப்படிப்பட்ட அரசியல் தலைவர்கள் பார்த்து பேசுவது நல்லது..இல்லாவிட்டால் இப்படித்தான் இருந்த எம்.எல்.ஏ பதவிக்கும் சிக்கல் வந்து சேரும். ஒருவேளை இந்த சம்பவத்திற்கு வேல்முருகன் மன்னிப்பு கேட்டால் நிலைமை சற்று மாறலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com