“திமுக எம்.பி- க்கு போன் செய்த விஜய்” - அமித்ஷாவிடம் இருந்தும் சென்ற போன் கால்… அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய சம்பவம்!

பாஜக அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை, என்னை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள்...
“திமுக எம்.பி- க்கு போன் செய்த விஜய்” - அமித்ஷாவிடம் இருந்தும் சென்ற போன் கால்… அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய சம்பவம்!
Published on
Updated on
1 min read

2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுகவிற்கு இடையே நிலவி வந்த இரண்டு முனை போட்டியை மாற்றி அமைக்கும் விதமாக நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தின் வருகை இந்த ஆண்டு தேர்தலை மும்முனை போட்டியாக மாற்றியுள்ளது. தமிழக வெற்றி கழகம் தொடங்கியதிலிருந்து விஜய் அரசியல் எதிரியாக திமுகவையம், கொள்கை எதிரியாக பாஜகவையும் எதிர்த்து வருகிறார். மேலும் பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுகவையும் எதிர்த்து வருகிறார். இதற்கிடையில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற செய்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமியும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் ‘ஒரு மிகப்பெரிய மக்கள் சக்தி நமது கூட்டணிக்கு வர இருக்கிறது’ என தெரிவித்து வந்தார்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய விஜய் “பாஜக அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை, என்னை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம், தவெகவின் ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது மட்டும் தான்” என தெரிவித்திருந்தார். பின்னர் அவர் பேசும் கூட்டங்களிலும், செய்யும் பிரச்சாரங்களில் தொடர்ந்து திமுகவை எதிர்த்து வந்தார். திமுக கொடுத்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு நிறைவேற்றாத வாக்குறுதிகளை குறித்து விமர்சித்து வருகிறார். திமுகவின் கொள்கையே கொள்ளை தானே என கடுமையாக திமுக அரசை சாடி வருகிறார்.

மேலும் கடந்த மாதம் ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்பின் போது பேசிய விஜய் தனக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறவை பிரிக்க பார்க்கிறார்கள் என்றும் ‘திமுக ஒரு தீய சக்தி’ என்றும் திமுகவை கடுமையாக சாடினார். இந்நிலையில் இன்று திமுகவின் துணைபொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அவர்களின் 58 வது பிறந்தநாளையொட்டி அவருக்கு விஜய் போன் செய்து வாழ்த்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவை தொடர்ந்து எதிர்த்து வரும் விஜய் கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது ஏன்? என அரசியல் வட்டாரங்களில் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் அரசியலில் ஒரு மூத்த தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவது மரியாதை நிமித்தமான ஒரு செயல் தான் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும் உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த உறுப்பினருமான அமித் ஷாவும் திமுக பொதுச்செயலாளர் கனிமொழி அவர்களுக்கு போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com