"எம்ஜிஆரின் மறுபிறவி விஜய்".. தாராபுரம் வேட்பாளர் சொல்ல சொல்ல.. முதல்வர் விஜய் கொடுத்த ரியாக்ஷன்!

புரட்சி தலைவரின் மறுபிறவையாக இருக்குமோ.. நமக்கு மறுபடியும் நமது புரட்சித் தலைவர் கிடைத்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது.
 vijay visit dharapuram
Published on: 
Updated on: 
1 min read

தாராபுரம் இடைத்தேர்தல் சத்யபாமாவை ஆதரித்து பிரச்சார கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டார். மேலும் இந்தக் கூட்டத்தில் தவெக அமைச்சர்கள் N ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.  

2026 சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சத்யபாமா, தனது MLA பதவியை 20 நாட்களுக்குள் ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தார். அதனையடுத்து தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதே தொகுதியில் மீண்டும் தவெக சார்பில் போட்டியிடுகிறார் சத்யபாமா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சார கூட்டத்தில் வேட்பாளர் சத்யபாமா, எதிர்க்கட்சியினர் தன் மீது அவதூறு பரப்புவதாக கண்கலங்கிய பேசினார்.

வேட்பாளர் சத்யபாமா “எம்ஜிஆரின் மறுபிறவி தான் விஜய் என்று மக்கள் நினைப்பதால் தான் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்று தெரிவித்ததும் அரங்கத்தில் மக்கள் உற்சாகத்தில் கூச்சலிட்டனர்.  தொடர்ந்து புரட்சித் தலைவர் வரும்போது இப்படித்தான் மக்கள் ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்து காத்துட்டு  இருப்பாங்களாம். அந்த மாதிரி இன்று முதல்வர்.. புரட்சி தலைவரின் மறுபிறவையாக இருக்குமோ.. நமக்கு மறுபடியும் நமது புரட்சித் தலைவர் கிடைத்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. அப்படிப்பட்ட நல்ல தலைவரிடம் வந்து சேர்ந்ததற்கு இன்று நான் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். முதல்வர் விஜயை எம்ஜிஆரின் என மறுபிறவி சத்யபாமா பேசப்பேச அவரின் குரலில் ஒரு ஏக்கமும், விஜயின் முகத்தில் ஒரு நெகிழ்ச்சியும் ஒளிர்ந்தது.

தொடர்ந்து பேசிய அவர் “எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.. ஏனெனில் அவர் திமுகாவோடு உடன்படிக்கை ஏற்படுத்தி கொள்ளவில்லை என்றால் நான் அந்த இயக்கத்தை விட்டு வெளியே வர முடிந்திருக்காது” என்று தெரிவித்தார். மேலும் நாங்கள் அவரின் துரோகத்தை தான் எதிர்க்கிறோம், இயக்கத்தை அல்ல என்றும் குறிப்பிட்டார்.

"தான் பணம் வாங்கியதாகவும், அதற்காக ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததாகவும் அவதூறு பரப்புகிறார்கள். திமுகவுடன் அதிமுக கூட்டணி வைக்க முயன்றதை பொறுக்காமல் தான் அங்கிருந்து வெளியேறினேன்” என்றும் தெரிவித்தார். ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு பழனிசாமி உதாரணம், எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தான் உதாரணம் என்றும் குறிப்பிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com