"திருப்பி திருப்பி சொல்வேன்.. Underline பண்ணி இதை சொல்வேன்".. பேசிக் கொண்டிருந்த போதே திடீரென டென்ஷனான முதல்வர் விஜய்!

"சத்தியத்தின் பக்கம் நிற்கும் நீங்கள் சத்யபாமா-வின் பக்கம் நில்லுங்கள்" என்றும் ஆதரவு கோரினார்
"திருப்பி திருப்பி சொல்வேன்.. Underline பண்ணி இதை சொல்வேன்".. பேசிக் கொண்டிருந்த போதே திடீரென டென்ஷனான முதல்வர் விஜய்!
Published on: 
Updated on: 
1 min read

தீவிரமடையும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பிரச்சார களத்தில் முதல்வர் விஜய் இன்று களமிறங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கோவை விமானம் வந்தடைந்து அங்கிருந்து பிரச்சார திடல் வரை சாலை மார்க்கமாக சென்றார். அவருக்கு வழி எங்கும் மக்கள் இருபுறமும் காத்திருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சார திடலுக்கு வந்தவரை அமைச்சர்கள் வேல் கொடுத்து வரவேற்றனர். 

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வென்று தான் ராஜினாமா செய்த தொகுதியில் மீண்டும் தவெக சார்பில் போட்டியிடுகிறார் சத்யபாமா என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சார கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சத்யபாமா, தன் மீது அவதூறு பரப்புவதாக கண்கலங்கினார். “ஒரு பெண் என்றும் பாராமல் என்னை அசிங்கமாக பேசுகிறார்கள்” என பரப்புரை கூட்ட மேடையிலையே கண்கலங்கியவரை தோளில் அணைத்து ஆறுதல் கூறினார் முதல்வர் விஜய். மேலும் “எம்ஜிஆரின் மறுபிறவி தான் விஜய் என்று மக்கள் நினைப்பதால் தான் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்றும் தெரிவித்தார் சத்யபாமா.

வேட்பாளர் சத்யபாமாவை தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய் தவெக ஆட்சியின் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை பட்டியலிட்டார். அதில்  “ஆட்சிக்கு வந்ததும் ஊழல், லஞ்சமற்ற நிர்வாகத்தை முழு முனைப்போடு செய்து வருகிறோம்; பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த சிறப்புப் படை அமைக்கப்பட்டு புதிய பணியிடங்கள் உருவாக்கம் நெல், பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது: தாய்மாமன் திட்டத்தில் மோதிரம் வழங்கப்பட்டுள்ளது; தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்..” என தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதல்வர் விஜய் சிறப்புரை ஆற்றினார்.

அதைத்தொடர்ந்து திமுக அதிமுகவை கடுமையாக சாடிய அவர் மக்களை நோக்கி “தாராபுரம் மக்களே இந்த தீயசக்தி திமுகவிற்கு ஓட்டு போடுவீங்க..?” அதே போல் எம்ஜிஆர் அவர்களுக்கும் ஜெயலலிதா அவர்களுக்கும் துரோகம் செய்த.. மறுபடியும் சொல்ற.. Underline பண்ணி சொல்ற துரோகம் செஞ்ச இந்த மற்றும் பலர் கூட்டத்திற்கு ஓட்டு போடுவீங்க..? என்று கேள்வி எழுப்பினார்.  

எனக்கும் உங்களை பற்றி நன்றாக தெரியும், திமுகவை எதிர்த்த எம்ஜிஆர் அவர்களுக்கும் ஜெயலலிதா அம்மையாருக்கும் சாதி பார்க்காமல், மதம் பார்க்காமல் ஓட்டு போட்டீர்கள். அதே போல் சத்தியத்தின் பக்கம் நிற்கும் நீங்கள் சத்யபாமா-வின் பக்கம் நில்லுங்கள் என்றும் ஆதரவு கோரினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com