தமிழகத்தின் அரசியல் களம் தற்போது தலைகீழாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாக்கியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு.
கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர்க வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 41-பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு விஜய் வெளியிட்ட வீடியோ அவருக்கே பின் விளைவுகளை ஏற்படுத்தி அவர்மீதான விமர்சனங்களை மேலும் அதிகரித்தது.
அதற்கு பிறகு விஜய் -ம் அவரது தந்தையும் சினிமா வட்டாரத்தில் எம்மாதிரியான உறவை வைத்திருந்தனர் என பல பல பிரபலங்கள் பொதுவெளியில் பேச ஆரம்பித்தனர். நடிகர் சரத்குமார், நெப்போலியன், கருணாஸ் என பலரும் விஜய் -உடனான தங்களின் கசப்பான அனுபவங்களை பொதுத்தளத்தில் பகிர்ந்து சலசலப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
ஆனாலும், விஜய்யின் வளர்ச்சியில் S.A.சந்திர சேகருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. மேலும், சினிமாவில் விஜய் வளர வளர அவர் தனது பெற்றோரை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது. ஆனால், மதுரை மாநாடுகளில் விஜய் தனது தாய் தந்தையரை கட்டியணைத்த பின்னரே மேடையேறினார்.
விஜய் -ன் முன்னாள் மேனஜரும், கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவருமான பி.டி.செல்வகுமார் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக -வில் இணைந்தார். இவர் விஜய் -ன் வசீகரா தொடங்கி காவலன் வரையிலான அனைத்து படங்களுக்கும் மக்கள் தொடர்பு துறை ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் பி.டி.செல்வகுமார் பேசுகையில், “திமுக ஆட்சியின் செயல்பாடுகள் என்னை ஈர்த்ததால் தான், எங்களின் கலப்பை மக்கள் இயக்கத்தை திமுக -உடன் இணைத்து, இன்னும் நிறைய மக்கள் பணிகளை செய்ய உள்ளோம். கலப்பை மக்கள் இயக்கத்தை போலவேதான் , விஜய் மக்கள் இயக்கத்தையும் கட்டமைத்து சிறப்பாக பணியாற்றினேன் இதை அவர்களே கூறியிருக்கின்றனர். காலபோக்கில் புதியவர்கள் பலர் உள்ளே வந்தார்கள். அந்த புதியவர்கள், விஜயின் தந்தையையே ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் ஒரு நடிகரின் சேவை நிலையற்றது. ஒரு இடத்தில் நல்ல கூட்டமும் இருக்கும் தீய கூட்டமும் இருக்கும், இந்த தீய கூட்டம் குப்பைகளை மட்டுமே உருவாக்கும்” என பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.