"அம்மா சத்தியமா சொல்றேன்.. நான் அப்படி சொல்லல" - வேட்பாளர் சத்தியபாமாவை நாங்க அழ சொல்லல - ராஜ் மோகன் வேதனை!

அவரின் அழுகை முற்றிலும் நடிப்பு, அதை இயக்கியது அமைச்சர் ராஜ்மோகன் தான் என்றும் விமர்சனங்கள் எழுந்தன
minister rajmohan
Published on: 
Updated on: 
2 min read

2026 சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சத்யபாமா, தனது MLA பதவியை 20 நாட்களுக்குள் ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தார். அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதே தொகுதியில் மீண்டும் தவெக சார்பில் போட்டியிடுகிறார் சத்யபாமா. இது அரசியல் வட்டாரத்தில் கடுமையான விவாதத்திற்கு உள்ளானது. அரசியல் கட்சிகள் தங்களது பிரசாதத்தை தொடங்கியதில் இருந்து தாராபுரம் தொகுதியில் கலவையான கணிப்புகள் வந்தது. மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், தவெக வேட்பாளர் சத்தியபாமாவிற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவித்து வருவதாகவும் களத்தில் செய்திகள் நிலவியது.  

அதையடுத்து விஜய் தாராபுரம் பிரசாரத்திற்கு வரவேண்டிய சூழல் உருவானது. அதையடுத்து ஏற்று தாராபுரத்திற்கு வருகை புரிந்து சத்யபாமாவை அதர்த்தி வாக்கு சேகரித்தார். அந்த பிரச்சார கூட்டத்தில் வேட்பாளர் சத்யபாமா, எதிர்க்கட்சியினர் தன் மீது அவதூறு பரப்புவதாக கண்கலங்கி பேசினார். உடனடியாக முதல்வர் விஜய் அவரை தோளில் அணைத்து ஆறுதல் சொன்னார். சத்யபாமா பேசியதாவது, “ஒரு பெண் என்றும் பாராமல் என்னை அசிங்கமாக பேசுகிறார்கள்” என பரப்புரை கூட்ட மேடையிலையே கண்கலங்கினார். மேலும் “எம்ஜிஆரின் மறுபிறவி தான் விஜய் என்று மக்கள் நினைப்பதால் தான் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்றும் தெரிவித்தார். 

இந்த இடத்தில் தான் ஒரு காட்சி வைரல் ஆகி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அதாவது சத்யபாமா அதிமுகவில் இருந்து வெளியேறியதற்கு காரணம் இயக்கம் இல்லை, பணம் இல்லை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியின் துரோகம் பிடிக்காமல் தான் வெளியேறினோம் என்றும் பேசிக்கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து தவெக அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ் மற்றும் செங்கோட்டையன் குறித்து புகழ்ந்து பேசிகொண்டிருந்த போது, அமைச்சர் ராஜ்மோகனு ஒரு போன் வந்தது. அந்த போன் காலிற்கு பிறகு, வேட்பாளர் சத்யபாமாவின் காதில் ஏதோயோ சொல்லிவிட்டு சென்றார். பின்னர் தான் சத்யபாமா பேச்சில், ஒரு மாற்றம் வந்த கண்கலங்கி பேச தொடங்கினர். மேடையிலையே அழுது பேசியிருந்தார்.

இது இணையத்தில் கவனத்தை பெற்று, சத்யபாமாவை அழுது பேச சொல்லியது ராஜ்மோகன் தான், அவருக்கு வந்த காலில் யாரோ இந்த ஸ்கிரிப்டை சொல்லி அவரை அழ சொல்லி அனுதாபத்தை ஏற்படுத்த தூண்டி இருக்கிறார்கள். அவரின் அழுகை முற்றிலும் நடிப்பு, அதை இயக்கியது அமைச்சர் ராஜ்மோகன் தான் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. மீம் கிரியேட்டர்கள் ஒரு படி மேல சென்று 'before - after போன் கால்' என்று வீடியோ ட்ரோல் செய்து கலாய்க்க தொங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகனிடன் இது குறித்து கேள்விகள் எழுந்தன. நேற்று தாராபுரத்துல ஆக்ஷன் சொன்ன பிறகு.. சத்தியமா அழுதாங்க மிகப்பெரிய ஒரு நாடகத்தை நடத்தி இருக்காங்க அப்படின்னு சொல்றாங்க இது குறித்து என்ன சொல்லகிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “இது மிகப்பெரிய வன்மம், இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

தொடர்ந்து அந்த நிகழ்வு குறித்து விவரித்த ராஜ்மோகன், “அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் பேசிய போதே இதே மாதிரி விழா ஒருங்கிணைப்பாளர் போன் பண்ணி ரொம்ப நேரமா CM நிக்கிறாரு.. சீக்கிரம் முடிங்க அப்படின்னு சொன்னாரு. அருண்ராஜ் அவர்களுக்கும் நான் சொன்னேன் நான் உயரம் குறைவா இருந்ததால் அப்போ தெரியல."

சத்தியபாமா அக்கா பேசும்போது ரொம்ப நேரமா CM நின்னுட்டே இருக்காரு, மக்கள் வெகு நேரமா காத்திருக்கறாங்க. அதனால கொஞ்சம் 'மேக் இட் பாஸ்ட்' அப்படிதான் சொன்னாங்களே தவிர வேறு எதுவுமே கிடையாது. இது அபாண்டமான குற்றச்சாட்டு, ‘என் தாயின் மீது ஆணையாக சொல்கிறேன்’. மக்கள் கொளுத்துற வெயில்ல நின்னுட்டு இருக்காங்க. வெளிய நிறைய பேர் நிக்கிறாங்க. அதனால மேக் இட் பாஸ்ட் சீக்கிரம் பேசுங்க. சீக்கிரம் முடிங்கனு தான் சொல்லிட்டு இருந்தாங்களே தவிர வேறு ஒன்றும் இல்லை. இப்படி அரசியல் காரணத்திற்காக அடிப்படை ஆதாரம் இல்லாமல் சொல்வதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். 

CM எட்டு மணி நேரத்துக்கு மேல பல இடங்களில் டிராவல் பண்ணி வந்துள்ளார். மக்கள் அன்பில் வீசிய பொருட்கள் எல்லாம் பிடித்து அவர்களுக்கு முகம் சுளிக்காமல் புன்னகை சிந்தி எல்லோரையும் மகிழ்வித்து மேடை ஏறிய அந்த மனிதர், வேனுக்கு வரும்போதே சோர்வாக இருந்தார். இதற்கு முன் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடைய நிகழ்ச்சியில் ஒருங்கிணைத்தவர், என்கிட்ட சொல்லிருக்காங்க நான் தொகுப்பாளரா இருந்த போது இதே போல் சொல்லி சொல்ல சொன்னார்கள்.

அடிப்படை உண்மை எல்லாருக்கும் தெரியும், ஆனா அரசியல் காரணங்கறதுக்காக ஒரு பெண்ணின் கண்ணீரை விமர்சித்து நெகட்டிவிட்டி ட்ரால பாக்குறாங்க அப்படி பேசுறவங்கள அரசியல் காரணத்துக்காக ஒரு ஐடி விங் சொன்னா பரவாயில்லை..  ஒரு தலைவர் அப்படி சொல்லலாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மை இதுதான் மக்களும் தலைவரும் காத்திருக்கிறார்கள், நின்று கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னதே தவிர வேறு எதுவும் கிடையாது என்று தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com