யார் இந்த சுகன்யா? சீனியர்களைத் தாண்டி சீட் கொடுத்த திமுக... வியூகம் என்ன?

கயல்விழி செல்வராஜ் அல்லது இந்திராணிக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எஸ். சுகன்யாவை வேட்பாளராக அறிவித்துள்ளது தலைமை.
யார் இந்த சுகன்யா? சீனியர்களைத் தாண்டி சீட் கொடுத்த திமுக... வியூகம் என்ன?
யார் இந்த சுகன்யா? சீனியர்களைத் தாண்டி சீட் கொடுத்த திமுக... வியூகம் என்ன?
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 6-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகத்தில் பரந்தாமன் மற்றும் தாராபுரத்தில் சுகன்யா ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், தாராபுரம் (தனி) தொகுதி திமுகவுக்கு சவால் மிக்கதாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ், எல். முருகனுக்கு எதிராக வெறும் 1,400+ வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது திமுகவின் வாக்கு சதவீதம் 46.85%. இந்தத் தேர்தலில் இந்திராணி இரண்டாம் இடம் பிடித்திருந்தாலும், வெறும் 32.2% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

திமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை மாற்ற இந்த வாக்குச் சரிவு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. கயல்விழி செல்வராஜ் அல்லது இந்திராணிக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எஸ். சுகன்யாவை வேட்பாளராக அறிவித்துள்ளது தலைமை.

யார் இந்த சுகன்யா?

அடிப்படையில் இவர் ஒரு வழக்கறிஞர். திராவிட முன்னேற்றக் கழக குடும்பப் பின்னணியைக் கொண்டவர். இவரை அறிமுகப்படுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் மு. பெ. சாமிநாதன், “நீண்டகால திராவிட பாரம்பரியக் குடும்பத்திலிருந்து வரும் இவர், தளவாய்ப்பட்டினம் ஊராட்சியைச் சேர்ந்தவர் மற்றும் கழக மகளிர் அணியில் செயலாற்றி வருகிறார். இவரது கணவர் தாராபுரம் மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். அவரது குடும்பத்தினர் பல்வேறு காலங்களில் உள்ளாட்சி பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள்” எனக் கூறியுள்ளார்.

கொங்கு மண்டலத்தில் பெரிய அளவில் வெற்றி பெறுவது திமுகவுக்குக் குதிரைக்கொம்பாகவே இருந்துள்ளது. இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெறுவதும் அரிதான விஷயம் என்பதால், மக்களுடன் இணைந்து பணியாற்றும் வேட்பாளராக சுகன்யாவைக் கண்டறிந்து நிறுத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட திமுகவில் அடித்தட்டு அளவில் நீண்ட காலம் பணியாற்றி வரும் இவர், தொண்டர்களுடனும் பெண்களுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டவர்.

உள்ளூர் மக்களுடனான தொடர்புதான் இவரது பலமாகக் கருதப்படுகிறது.

இவரைத் தேர்வு செய்து ஏன்?

நீண்ட நாட்கள் கட்சியில் இருந்தாலும், பெரிய அளவில் பண பலம் இல்லாத போட்டியாளராகக் கருதப்படுகிறார். ஆனாலும், மாவட்டச் செயலாளர் இல. பத்மநாபன் தேர்தல் செலவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம் எனக் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதற்கு முன்னதாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த கயல்விழி செல்வராஜ் மற்றும் முந்தைய வேட்பாளர் இந்திராணி மீது உட்கட்சியினருக்கே அதிருப்திகள், புகார்கள் இருந்ததால், இல. பத்மநாபன் தேர்தல் அனுபவம் இல்லை என்றாலும், புதிய முகமான எஸ். சுகன்யாவைப் பரிந்துரைத்துள்ளார்.

தாராபுரம் தனித் தொகுதியில் உள்ள பட்டியல் இன மக்களில் சுகன்யாவின் சமூகம் பெரும்பான்மை இல்லை என்பதால், இவரது தேர்வு சரியா என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர். எனினும், கட்சியினரிடம் இருந்து முழு ஒத்துழைப்பைப் பெறவும், பெண்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறவும் சரியான வேட்பாளராக இவர் திகழ்வார் என்பது திமுகவின் நம்பிக்கை.

யார் இந்த சுகன்யா? சீனியர்களைத் தாண்டி சீட் கொடுத்த திமுக... வியூகம் என்ன?
அமுலுவுக்கு பதில் பரந்தாமன், இந்திராணிக்கு பதில் சுகன்யா... திமுகவில் வேட்பாளர் மாற்றம் வியூகம் என்ன?

சுகன்யாவுக்கு இருக்கும் சவால்கள் என்ன?

முன்னமே சொன்னது போல, தாராபுரத்தில் வாக்கு சதவீதத்தைப் பெருமளவில் இழந்துள்ளது திமுக.

தவெகவின் 23.3% வாக்கு என்பது, விஜய்யின் 100 நாள் ஆட்சி மற்றும் கூட்டணி பலத்தால் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே வெற்றி பெற்ற சத்யபாமா மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. மேலும், அவருக்கு தனியான வாக்கு வங்கி பெரிதாக இல்லாததால், அதிமுகவின் 40.56% வாக்குகளில் பெரிய பாதிப்பு இருக்காது என்றே கூறப்படுகிறது. இதனால், அதிமுகவில் தாராபுரத்தில் சீட் பெற உள்கட்சியில் போட்டி நிலவுகிறது.

இப்போது தவெக சார்பில் சத்யபாமா மீண்டும் போட்டியிடுவாரா அல்லது வேறு வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

வேட்பாளர்கள் யார் யார் எனத் தெரிந்தால்தான் வெற்றி வாய்ப்புகளைக் கணிக்க முடியும் என்றாலும், 3 வேட்பாளர்களில் அதிகமாக உழைக்க வேண்டியவர் சுகன்யாதான்.

யார் இந்த சுகன்யா? சீனியர்களைத் தாண்டி சீட் கொடுத்த திமுக... வியூகம் என்ன?
சட்டமன்றத்தில் செய்த சைகை; ஆன்லைனில் எழுந்த விமர்சனங்கள் - விஜய் அளித்த விளக்கம் என்ன?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com