திருப்பத்தூர் களத்தில் முந்துவது யார்? - "மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" கருத்துக்கணிப்பு முடிவுகள்!

அதிமுக கூட்டணி 37 சதவீத வாக்குகளைப் பெற்று கடும் போட்டியை அளிக்கும் என்று தெரிகிறது
tirupattur constituency
Published on
Updated on
2 min read

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் திருப்பத்தூர் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதி, தற்போதைய அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் அவர்களின் கோட்டையாகக் கருதப்படுகிறது. வரும் தேர்தலில் அங்கு நிலவப்போகும் அரசியல் சூறாவளி குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் விரிவாக அலசப்பட்டது.

திருப்பத்தூர் தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆய்வு செய்ததில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 12.57 சதவீதம் பேரும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 29.4 சதவீதம் பேரும் உள்ளனர். 41 முதல் 60 வயதுடையவர்கள் 39.2 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 18.7 சதவீதமாகவும் உள்ளனர். சமுதாய ரீதியாக முக்குலத்தோர் 22 சதவீதம் பேர் முதன்மையாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக யாதவர்கள் 17 சதவீதம் மற்றும் முத்தரையர் 10 சதவீதம் எனப் பரவலாக உள்ளனர். இது 76 சதவீதம் கிராமப்புறங்களைக் கொண்ட தொகுதியாகும்.

திருப்பத்தூர் தொகுதி பற்றிய முழு தேர்தல் கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
tirupattur constituency

இங்கு நிலவும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக ஏரிப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளுக்குப் போதிய நீர் ஆதாரம் இல்லாதது மற்றும் குடிநீர் தட்டுப்பாடு பெரிய குறையாக உள்ளது. சிவகங்கை மாவட்டத்திலேயே பெரும் தொழிற்சாலைகள் இல்லாதது மற்றும் வேலைவாய்ப்பின்மை இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விவசாய விலைபொருட்களைப் பதப்படுத்தக் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது. மேலும், குக்கிராமங்களுக்கு முறையான சாலை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, திமுகவின் பெரிய கருப்பன் 49 சதவீத வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார். அதிமுகவின் மருது அழகுராஜ் 31.5 சதவீத வாக்குகளைப் பெற்றார். அந்தத் தேர்தலில் திமுக 130 பூத்களில் வலுவாகவும், அதிமுக 72 பூத்களில் வலுவாகவும் இருந்தது. சுமார் 61 பூத்கள் ஸ்விங் நிலையில் இருந்தன. தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி இப்பகுதியில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய 'கான்சிலிடிக்ஸ்' குழுவினர் நடத்திய 2026 தேர்தல் கணிப்பின்படி, திருப்பத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் திமுக கூட்டணி 40 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 37 சதவீத வாக்குகளைப் பெற்று கடும் போட்டியை அளிக்கும் என்று தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் 8 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 12 சதவீத வாக்குகளையும் பிரிக்கக்கூடும். பூத் வாரியான தரவுகளின்படி, தற்போது திமுக 104 பூத்களில் வலுவாகவும், அதிமுக 92 பூத்களில் வலுவாகவும் உள்ளது. சுமார் 63 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.

இந்தத் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இடையேயான வெற்றி வித்தியாசம் சுமார் 3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் எளிமையான அணுகுமுறை மற்றும் தொகுதியுடனான தொடர்பு திமுகவிற்குச் சாதகமாக உள்ளது. இருப்பினும், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com