இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு?.. ஆர்வமே காட்டாத 'இளம் தலைமுறை' - நிர்வாகிகளை அழைத்து விளாசிய "தலைமை"?

தவெக பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைப்பதற்கு ஒரு காரணமும் இளைஞர்களின் இந்தப் பங்களிப்பு என்று கணிக்கப்பட்டது..
by election
Published on: 
Updated on: 
2 min read

நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் மதுராந்தகம் தொகுதியிலும், சத்யபாமா தாராபுரம் தொகுதியிலும் வெற்றி பெற்றனர். பின் வெற்றி பெற்ற இருவரும் 20 நாட்களில் தனது MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். இந்த கட்சி தாவல் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தையும், தொகுதி மக்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தி இருந்தது. 

இந்நிலையில் தான் காலியான அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ராஜினாமா செய்தவர்களை அதே தொகுதியில் வேட்பாளர்களாக களமிறங்கியது தவெக. இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியையும் அதிருப்தியை ஒரு சேர எழுப்பியது. மேலும் எதிர்கட்சிகளால் விமர்சனத்திற்கும் உள்ளானது. அக்டோபர் 6 அன்று வாக்குப்பதிவு என்றும், வாக்குகள் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

சட்டமன்ற தேர்தலை போல் இல்லாமல் இரண்டு தொகுதியின் இடைத்தேர்தல் களமும் பலமுனை போட்டியாக மாறியது. இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் என ஐந்துமுனை போட்டியாக நிலவியது. பிரசாரத்தின் போது இருவரின் ராஜினாமா மற்றும் அக்கட்சி தாவல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீத வாக்குப்பதிவு நடந்துதுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தாராபுரம் (தனி) தொகுதியில் 80.31 சதவீதம் வாக்கு பதிவானதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது. கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் 93.22 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது என்பதும், அதனைத் தொடர்ந்து தாராபுரம் (தனி) தொகுதியில் கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் 89.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் நடைபெற்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தோராயமாக 8 சதவீதம் வரை வாக்குப்பதிவு குறைந்திருக்கிறது. இது வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கையின் வித்தியாசத்தில் பிரதிபலிக்கக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். காரணம் சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களின் வாக்கு சதவீதம் அதிகரித்து இருந்தது. இளைஞர்களின் பங்களிப்பே இந்த வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது. பின்னர் விஜய் தலைமையிலான தவெக பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைப்பதற்கு ஒரு காரணமும் இளைஞர்களின் இந்தப் பங்களிப்பு என்றும் கணிக்கப்பட்டது.

ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதியிலும் வெற்றி பெற்றது அதிமுக வேட்பாளர். அதிமுக வேட்பாளர் 69284 பெற்று வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் 62090 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும், மூன்றாவது இடத்தில் 59838 வாக்குகளுடன் திமுக வேட்பாளர் இடம்பெற்றித்தார். இவர்களுக்குள் அப்போதே பெரிய வாக்கு வித்தியாசம் இல்லை. அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல்  தற்போது தவெக வேட்பாளர். ராஜினாமா அதிருப்தி மற்றும் அதிமுக ஆதரவு வாக்குகள் பிரிந்தால் ஆளும் கட்சியான தவெக வெற்றி பெறுவது கடினம். 

தாராபுரம் தொகுதி முற்றிலும் மாறுபட்ட கணிப்பை கொடுக்கிறது. அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 81100  பெற்று பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக 64373 மற்றும் தவெக 46438 வாக்குகள் பெற்றிந்தனர். இந்த தொகுதியில் விஜய்யின் வருகை பெரிதாக எடுபடவில்லை. மேலும் அதிமுகவின் வாக்கு வாங்கி பலமாக இருந்துள்ளது. சத்யபாமா மீதான அதிருப்தி அலை, திமுகவிற்கு சாதகமாக வாய்ப்புள்ளது. அப்படி இல்லாமல் மீண்டும் அதிமுகவின் கோட்டை என நிரூபிக்கும் நிலை வரலாம். இடைத்தேர்தல் பிரசாத்தின் போதே தொகுதி மக்கள் சத்யபாமாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டு தொகுதியிலும் மாறுபட்ட கணிப்பு இருந்தாலும், இதுவரை இடைத்தேர்தலில் ஆளும்கட்சியே வெற்றி பெரும் நிலை தமிழகத்தில் உள்ளது. விஜய்யின் ரோடு ஷோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். இங்கு தான் இரு பெரிய கேள்வி எழுகிறது, வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.. களத்திலும் இளைஞர்கள் முன் போல் விஜய் அலையை பிரதிபலிக்கவில்லை. எனவே இந்த தேர்தலில் இளம் தலைமுறை பெரிதாக ஆர்வமே காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் தவெகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் கடும் குழப்பத்தில் இருப்பதாகவும், கட்சியின் தலைமை அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அந்த தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு கடும் சிக்கல் எழுந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com