மீண்டும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட 'தமிழ்த்தாய் வாழ்த்து! 'தொடர்ந்து மீறப்படும் மரபு

தற்போது மீண்டும் வந்தே மாதரத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Tamil Thai Vazhthu controversy
Tamil Thai Vazhthu controversyTamil Thai Vazhthu controversy
Published on
Updated on
1 min read

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக 23 பேர் பதவியேற்கவுள்ளதாக இருக்கும் நிலையில் மக்கள் மாளிகை அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்பு விழா நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மீண்டும் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, ஆளுநர் அர்லேகர் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவை மற்றும் தற்காலிக சபாநாயகரின் பதவியேற்பு விழாவில், முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், பின்னர் தமிழ் தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. இந்த வரிசைமுறை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்தது.

இதையடுத்து, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது X தளத்தில், 'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

மேலும், "தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை என்று ஆணித்தரமாக தன்னுடைய சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, "இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்! என்று அவர் முன்பு கூறிய நிலையில், தற்போது மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மீண்டும் முன்றாவது இடத்திற்கு 6தள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே இடதுசாரி கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்த நிலையில் தற்போது மீண்டும் வந்தே மாதரத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com