

தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தையொட்டி இன்று வெளியாகிறது புதிய அமைச்சர்கள் பட்டியல். புதியதாக பதவியேற்கும் 23 அமைச்சர்களில் 2 காங்கிரஸ் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 அமைச்சர்கள் பட்டியல் வெளியானது, அதையடுத்து அவர்கள் முதல்வர் விஜய் தலைமையில் பொறுப்பேற்று கொண்டனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை சக்தியாக உருவெடுத்த தவெக, பின்னர் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும், தவெக தலைமையிலான அரசு 144 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று தனது ஆட்சிப் பலத்தை உறுதிப்படுத்தியது. இந்த வெற்றி, புதிய அரசின் நிலைத்தன்மையையும் கூட்டணி ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், புதிய அமைச்சரவை தொடர்பான இலாகா ஒதுக்கீட்டு பட்டியலை மே 16 அன்று ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய், காவல்துறை, உள்துறை, பொதுநிர்வாகம் உள்ளிட்ட முக்கிய மற்றும் அதிகாரமிக்க துறைகளை நேரடியாக தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். மக்கள் பாதுகாப்பு, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் சட்ட ஒழுங்கை முன்னிலைப்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய துறைகள் முதல்வரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். புதிய அமைச்சரவை அமைப்பு மற்றும் இலாகா ஒதுக்கீடுகள் தமிழக அரசியலில் அடுத்த கட்ட மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவையின் முழுப் பட்டியல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான இந்த அமைச்சரவையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த புதிய மற்றும் இளம் முகங்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சட்டம், நிர்வாகம், கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகளை முன்னெடுத்து செல்லும் வகையில் அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிராந்திய சமநிலை மற்றும் சமூக பிரதிநிதித்துவத்தையும் கருத்தில் கொண்டு இந்த அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதிமுக சி.வி சண்முகம் மற்றும் எஸ்.பி வேலுமணி தரப்பின் சார்பில் யாரும் தவெக அமைச்சரவையில் இடம் பெறவில்லை. இது ஏமாற்றத்தை தருவதாக எஸ்பி வேலுமணி தெரிவித்திருந்தார். மேலும் சிபிஐ மற்றும் சிபிஎம் நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருந்தாலும், அதிமுக MLA-க்கள் யாரும் அமைச்சரவையில் இடம் பெறக்கூடாது எனவும் அப்படி இருந்தால் இரு கட்சிகளும் கூட்டணி ஆதரவு மறுபரிசீலனை செய்வோம் என்று எச்சரித்திருந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தின் புதிய அமைச்சரவை பட்டியல் மற்றும் அவர்களின் தொகுதிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்ரீநாத் – (214 தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி)
கமலி. எஸ் – (112 அவிநாசி சட்டமன்றத் தொகுதி)
சி. விஜயலட்சுமி – (97 குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி)
ஆர்.வி. ரஞ்சித் குமார் – (37 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி)
வினோத் – (171 கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி)
ராஜீவ் – (210 திருவாடானை சட்டமன்றத் தொகுதி)
பி. ராஜ்குமார் – (155 கடலூர் சட்டமன்றத் தொகுதி)
வி. காந்திராஜ் – (38 அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி)
மதன் ராஜா. பி – (217 ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி)
ஜெகதேஸ்வரி. கே – (202 ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி)
ராஜேஷ் குமார். எஸ் (காங்கிரஸ்) – (234 கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி)
எம். விஜய் பாலாஜி – (98 ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி)
லோகேஷ் தமிழ்செல்வன் – (92 ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி)
விஜய் தமிழன் பார்த்திபன் – (90 சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி)
ரமேஷ் – (139 ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி)
பி. விஸ்வநாதன் (காங்கிரஸ்) – (188 மேலூர் சட்டமன்றத் தொகுதி)
குமார். ஆர் – (26 வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி)
தென்னரசு. கே – (29 ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி)
வி. சம்பத் குமார் – (118 கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி)
முகமது ஃபர்வாஸ். ஜே – (183 அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி)
டி. சரத்குமார் – (31 தாம்பரம் சட்டமன்றத் தொகுதி)
என். மரிய வில்சன் – (11 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி)
விக்னேஷ் கே – (122 கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி)
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.