ஞாபகத்திறனை பாதிக்கும் சர்க்கரை நோய் மருந்து.. 60 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த திடுக்கிடும் உண்மை! மூளையின் செயல்பாட்டையே மாற்றுகிறதா மெட்ஃபோர்மின்?

மூளையில் நேரடியாகச் செயல்படுவதாகவும், இது புதிய வகை சிகிச்சைகளுக்கு வழிவகுக்கக் கூடாது என்றும் சமீபத்திய ஆய்வு..
Diabetes
Published on
Updated on
2 min read

இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்காக மெட்ஃபோர்மின் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. மெட்ஃபோர்மின் என்பது வகை 2 நீரிழிவு நோயைக் (Type 2 Diabetes) குணப்படுத்தப் பயன்படும் ஒரு முதன்மை மருந்து. இது கல்லீரலில் உற்பத்தியாகும் குளுக்கோஸ் அளவைக் குறைத்து, இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. இந்த மருந்து, ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படும் போது, சர்க்கரை நோய் தொடர்பான சிக்கல்களை தடுக்க உதவும். ஆனால் அது முழுவதும் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விஞ்ஞானிகளுக்கு இதுவரையில் துல்லியமாகத் தெரியவில்லை.

தற்போது இது மூளையில் நேரடியாகச் செயல்படுவதாகவும், இது புதிய வகை சிகிச்சைகளுக்கு வழிவகுக்கக் கூடாது என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவின் பேய்லர் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், உடலின் மற்ற பகுதிகளில் உள்ள உயிரியல் செயல்முறைகளில் அந்த மருந்து ஏற்படுத்தும் விளைவுகளுக்கு கூடுதலாக, அது செயல்படுவதாக தோன்றும் ஒரு மூளைப் பாதையை 2025-ல் கண்டறிந்தனர்.

"மெட்ஃபோர்மின் முதன்மையாக கல்லீரலில் குளுக்கோஸ் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது . மற்ற ஆய்வுகள் அது குடல் வழியாக செயல்படுவதைக் கண்டறிந்துள்ளன," என்று பேய்லர்  மருத்துவக் கல்லூரி நோயியல் உடலியல் நிபுணரான மகோடோ ஃபுகுடா கூறினார். மேலும் முழு உடலின் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தும் ஒரு முக்கியக் காரணியாக மூளை பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், அதை ஆராய்ந்த்ததாகவும்  மெட்ஃபோர்மினின் நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளுக்கு மூளை பங்களிக்கிறதா, பங்களித்தால் எவ்வாறு பங்களிக்கிறது என்பதையும் ஆய்வு செய்ததாக கூறினார். மெட்ஃபோர்மின் பொதுவாக டைப் 2 நீரிழிவு நோய்க்கான பாதுகாப்பான, முதல்-வரிசை மருந்தாக கருதப்படுகிறது, ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள் இது மூளையில் உள்ள Rap1 புரதத்தை பாதிப்பதன் மூலம் செயல்படுவதைக் காட்டுகின்றன. இந்த மருந்து மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியை அடைந்து, சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது. இது மூளை வயதாவதை மெதுவாக்கக்கூடும் என்றாலும், நீண்ட கால பயன்பாடு சிலருக்கு அறிவாற்றல் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற கலவையான ஆதாரங்களும் உள்ளன.

மெட்ஃபோர்மின் மற்றும் மூளை தொடர்பான முக்கிய அம்சங்கள்: மெட்ஃபோர்மின் மூளையின் வென்ட்ரோமீடியல் ஹைபோதாலமஸ் பகுதியில் உள்ள Rap1 எனப்படும் புரதத்தை பாதித்து, நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது. மேலும் மெட்ஃபோர்மின் மூளை வயதாவதை மெதுவாக்குகிறது, நரம்பு பாதுகாப்பு, மூளை அழற்சியைக் குறைத்தல் மற்றும் நரம்பு மண்டலத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனினும் சில ஆய்வுகள் நீண்ட காலப் பயன்பாடு அறிவாற்றல் செயல்பாடு (cognition) மற்றும் நினைவாற்றலில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று சுட்டிக்காட்டுகின்றன.

மெட்ஃபோர்மின் சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அதன் மூளை செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீண்ட கால பயன்பாட்டின் போது ஏதேனும் நினைவாற்றல் அல்லது அறிவாற்றல் மாற்றங்கள் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது என்றும் மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

விலங்கு மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், தொடர்ச்சியான பயன்பாட்டினால் நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன் குறைபாடு ஏற்படுவது கண்டறியப்பட்டது. இந்த அறிவியல் இன்னும் வளர்ந்து வருகிறது. சில ஆய்வுகள் மூளை ஆரோக்கியத்திற்கு நன்மைகள் இருப்பதாக கூறுவதாலும், மற்றவை சாத்தியமான பாதகங்களைச் சுட்டிக்காட்டுவதாலும், சான்றுகள் கலவையாகவே உள்ளன. தற்போதைக்கு, மெட்ஃபோர்மின் நீரிழிவு நோய்க்கு ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சையாக தொடர்கிறது, ஆனால் புதிய தரவுகள் வெளிவரும்போது இது மேலும் உன்னிப்பாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். நோயாளிகள் பீதியடையவோ அல்லது மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகளை நிறுத்திவிடவோ கூடாது என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். மாறாக, மெட்ஃபோர்மினை நீண்டகாலம் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அபாயங்கள் இரண்டையும் புரிந்து கொள்வதன் முக்கியத்துவத்தை இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com