ஃபோர்ப்ஸ் பட்டியல்: உலகின் டாப் 10 பணக்காரர்கள் யார்? - முகேஷ் அம்பானியின் நிலை என்ன?

உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை வெளியிட்டுள்ளது
Top-10-Forbes-Billionaires-as-of-2025
Top-10-Forbes-Billionaires-as-of-2025
Published on
Updated on
1 min read

உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை வெளியிட்டுள்ளது.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் இந்தப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது நிகர மதிப்பு $415.6 பில்லியன் ஆகும்.

மைக்ரோசாஃப்டின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்டீவ் பால்மர், $153.1 பில்லியன் நிகர மதிப்புடன் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

செமிகண்டக்டர் துறையில் உள்ள ஜென்சென் ஹுவாங், 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பெர்க்ஷயர் ஹதவே (Berkshire Hathaway) நிறுவனத்தின் தலைவர் வாரன் பஃபட், 95 வயதில் 10-வது இடத்தில் உள்ளார்.

உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியல் (செப்டம்பர் 2, 2025 நிலவரப்படி):

வரிசை எண் பெயர் நிகர மதிப்பு (பில்லியன் USD) வயது நிறுவனம் நாடு

1) எலோன் மஸ்க்(54) $415.6 டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் அமெரிக்கா

2) லாரி எலிசன்(81) $270.9ஆரக்கிள் அமெரிக்கா

3) மார்க் ஜுக்கர்பெர்க்(41) $253.0 ஃபேஸ்புக் அமெரிக்கா

4) ஜெஃப் பெசோஸ் (61) $240.9 அமேசான் அமெரிக்கா

5) லாரி பேஜ் (52) $178.3 கூகுள் அமெரிக்கா

6) செர்ஜி பிரின் (52) $165.9 கூகுள் அமெரிக்கா

7) பெர்னார்ட் அர்னால்ட் & குடும்பம்(76)$154.3 LVMH பிரான்ஸ்

8) ஸ்டீவ் பால்மர்(69) $153.1 மைக்ரோசாஃப்ட் அமெரிக்கா

9) ஜென்சென் ஹுவாங்(62) $151.4 செமிகண்டக்டர்கள் அமெரிக்கா

10) வாரன் பஃபட்(95) $150.4 பெர்க்ஷயர் ஹதவே அமெரிக்கா

இந்தியாவின் நிலை:

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி, 18-வது இடத்தில் உள்ளார். அவரது நிகர மதிப்பு சுமார் $100.9 பில்லியன் ஆகும். ஆசியாவில் $100 பில்லியன் மதிப்புள்ள கிளப்பில் இடம் பிடித்துள்ள ஒரே நபர் அவர்தான்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com