
கடந்த ஏப்ரல் 22 -அம்மா தேதி காஷ்மீரின் பாகல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் பலர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுடன் தொடர்புடைய “The Resident Front” என்ற அமைப்பே இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக நம்பப்பட்டதால், இரு நாடுகளுக்கும் இடையில் போர்ச்சூழல் உண்டானது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக “ஆபரேஷன் சிந்தூர்” என்ற நடவடிக்கையை கையிலெடுத்தது. இரு நாடுகளும் மாற்றி மாற்றி தாக்குதலை தொடர்ந்தனர் ஒருகட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு போர் மூலம் தடுக்கப்பட்டது.
ஆனால் பல முறை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் எனக்கூறிவிட்டார். இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்கா எந்த பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் மோடி அண்மையில் தொலைபேசி உரையாடலில் தெளிவுப்படுத்தியும் கூட ‘போரை நிறுத்தியது நான்தான்’ என ட்ரம்ப் கூறி வருகிறார்..
இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது. போரை நிறுத்தியது யார் என்ற கதை இப்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியிருக்கிறது.. ‘இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து போரை நிறுத்தியதாக’ ட்ரம்ப் தெரிவித்து 39 நாட்கள் ஆகிறது.
இதன் பிறகே ‘இந்தியா மத்தியஸ்த்தை ஏற்காது’ என ட்ரம்ப் உடனான தொலைபேசி உரையாடலில் பிரதமர் மோடி சொல்லியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தார். இந்நிலையில், 39 நாட்களுக்கு பிறகு ஏன் அதை மறுக்க வேண்டும்? இந்திய மக்களிடமோ அல்லது நாடாளுமன்றத்திலோ பிரதமர் மோடி ஏன் இதை நேரடியாக தெரிவிக்கவில்லை? பிரதமர் மோடி உடனான தொலைபேசி உரையாடலுக்கு பிறகும் ‘போரை நிறுத்தியது நான்தான்’ என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதோடு போரை நிறுத்த பாகிஸ்தான் தரப்பில் அசிம் முனீர் மற்றும் இந்தியா தரப்பில் மோடி உதவியதாக அவர் கூறி இருந்தார். மேலும், பாகிஸ்தானை நேசிப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை மதிய விருந்துக்கு அழைத்ததாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டது.” என குறிப்பிட்டுள்ளார்.
ரீங் -இஸ்ரேல் தாக்குதல் நிகழ்ந்தபோது கூட “ஈரானை பேச்சு வார்த்தைக்கு அழித்த ட்ரம்ப், “இந்தியா- பாகிஸ்தானை போல” இந்த பிரச்சனைக்கும் நாம் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என் சொல்லியிருந்தார். இவ்வாறு தொடர்ந்து தம்பி கூறிவருவதை பேசுபொருளாகி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.