

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரானிய அரசு தொலைக்காட்சிகள் மற்றும் அதன் தொடர்புடைய ஊடகங்களில் முதன்முதலில் ஒளிபரப்பப்பட்ட செய்தி Where to kill Barron Trump? பாரன் டிரம்ப்பை எங்கே கொல்லலாம்? என்ற அதிர்ச்சிகரமான தலைப்புடன் தொடங்குகிறது இந்த வீடியோ. அவர் கல்லூரிக்கு போகும் வழி, கார் பார்க்கிங், சுற்றி நிற்கும் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் வரை கிராபிக்ஸ் போட்டு அலசி காட்டியுள்ளது.
பாரன் ட்ரம்ப் நோட்ஸ் எடுக்கப் போவதைக் கூட சாட்டிலைட் மூலம் கண்காணிக்கப்பட்டதை குறிப்பிட்டுள்ளது. பாரன் டிரம்பின் கேமிங் கணக்குகள், அவரது வீடியோ கேம்கள் மற்றும் அவரது வகுப்புத் தோழர்கள் பற்றிய தகவல்களைக் கண்டறிந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. செய்தியின் உச்சமாக பேரனை கொல்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசுத் தொகை என்று அறிவித்துள்ளதோடு "இதுவெறும் ஆரம்பம்தான், காத்திரு!" என்ற சினிமா பாணி எச்சரிக்கையோடு முடிகிறது அந்தத் செய்தி இந்த ஆண்டு பிப்ரவரியில், அமெரிக்காவும், இஸ்ரேலும், தெஹ்ரான் மீது நடத்திய திடீர் தாக்குதலின் விளைவாக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்வினையாக பழிக்கு பழியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருகிறது.
தெஹ்ரானில் நடைபெற்ற உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கில் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளரால் டிரம்பின் மரணத்திற்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த வீடியோ வெளியிடப்பட்டு திடுக்கிட வைத்துள்ளது. கடந்த காலங்களில் டிரம்ப் மற்றும் பிற உயர் அதிகாரிகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில், அரசியலில் ஈடுபடாத ஒரு கல்லூரி மாணவரைக் குறிவைத்து 10 மில்லியன் வெகுமதியுடன் வீடியோ வெளியிடப்பட்டிருப்பது அமெரிக்க உளவுத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆகஸ்ட் 25ஆம் தேதி அமெரிக்காவின் சர்வதேச ஊடகங்கள் மூலம் இந்த செய்தி வெளியாகிய நிலையில், அதனை அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் ஒத்துக்கொண்டு அதற்கு அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்ததைத் தொடர்ந்து உலகளவில் இந்த செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து பதில் அளித்துள்ள அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ், எங்களது பாதுகாப்பில் உள்ள நபர்களுக்கு எதிராக வரக்கூடிய எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தலையும் நாங்கள் தீவிரமாக விசாரித்து வருவதாகவும், பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் தகவல்களின் ரகசியத்தன்மை கருதி, கூடுதல் பாதுகாப்பு மாற்றங்கள் குறித்த விரிவான விவரங்களை வெளிப்படையாக விவாதிக்க முடியாது என்றும் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து டிரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கியமான அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உளவுத்துறை கண்காணிப்பு மற்றும் களப் பாதுகாப்பு ஏற்பாடுகள், உடனுக்குடன் மறுஆய்வு செய்யப்பட்டு பலப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரம்ப் குடும்ப உறுப்பினர்களைக் குறிவைப்பது போன்ற ஈரான் ஊடகங்கள் வெளியிடுவது இது முதல் முறையல்ல. கடந்த ஜூலை மாதம், ஈரான் அரசின் தொடர்புடைய தஸ்னிம் என்ற செய்தி நிறுவனம், அதிபர் ட்ரம்பின் மனைவி “மெலானியாவை எங்கே கொல்வது?” என்ற தலைப்பில் ஒரு காணொளியை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற முந்தைய மிரட்டல்களின் போது தனக்கோ அல்லது தனது குடும்பத்தினருக்கோ எதிராக ஈரான் ஏதேனும் தாக்குதல் நடத்த முற்பட்டால், அதற்கு அமெரிக்கா வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தும் என்று டிரம்ப் ஏற்கனவே கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார். வல்லரசு நாட்டின் பாதுகாப்பு வியூகங்களை வகுக்கும் அமெரிக்க அதிபருக்கு, தன் மகனின் அன்றாடப் பயணமே ஒரு சர்வதேச செய்தியாக மாறிய இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச அரசியல் வல்லுனர்கள் அமெரிக்காவிற்குள் அதிபரின் குடும்பத்துக்கே பாதுகாப்பு இல்லை என்ற அச்ச உணர்வை உருவாக்குவதற்கும், அமெரிக்க அரசின் அழுத்தங்களுக்குப் பதிலடி கொடுப்பதற்காகவும், ஈரான் இந்த உத்திகளைக் கையாள்வதாக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரு வல்லரசின் அதிபரை நிலைகுலைய வைக்க, எதிரி நாட்டு ரேடார்கள் அவரது மகனின் கேமிங் கணக்குகளையும், அவனது நிழலையும் பின்தொடந்திருப்பது டிஜிட்டல் போரின் ஆரம்ப அபாயங்களை காட்டியுள்ளது. எவ்வளவும் பெரிய அதிகார சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாலும், எப்போதும் எதிரியின் துப்பாக்கி முனையில்தான் வாழ வேண்டியியுள்ளது என்பதே வன்முறை உலகின் நிதர்சனம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்