சிறையில் இருந்த தனது வருங்கால மனைவியை தொலைபேசியில் திருமணம் செய்துகொண்ட மறுநாள் காலையில், இளம் ஈரானியர் ஒருவர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட செய்தி பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
25 வயதான அலிரெஸா செபாஹி, 22 வயதான மஹ்ஷத் கேஷானி, ஆகிய இருவரும் வெவ்வேறு ஈரானிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதும் தொலைபேசி வாயிலாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் திருமணம் செய்து கொண்ட மறுநாள் அதாவது அக்டோபர் 5 அன்று செபாஹி தூக்கிலிடப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரியில் நடந்த எழுச்சி போராட்டத்தின்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 8 அன்று, போராட்டக்காரர்களுடனான மோதல்களின் போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய நீதித்துறை கூறியதையடுத்து, அலிகானி சதுக்க வழக்கு என்று அறியப்படும் வழக்கில் செபாஹி குற்றவாளிகளில் ஒருவராக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இவருக்கு மரணதண்டனையும் அந்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டது.
மேலும், அவரது முன்னாள் சிறைத்தோழர் ஒருவர் அளித்த தகவல்களின்படி, செபாஹியின் கைது நடவடிக்கை ஆரம்பத்திலிருந்தே வன்முறையாக இருந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புப் படையினர் அவரது குடும்ப வீட்டிற்குள் நுழைந்து, கைது நடவடிக்கையின்போது அவரது கால்களில் நான்கு முறை சுட்டதாக ஈரான் இன்டர்நேஷனல் செய்தி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, செபாஹி கைது செய்யப்படுவதற்கு முன்பு, மஹ்ஷத் கஷானி என்ற இளம் பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்துள்ளார். ஜனவரி மாதப் போராட்டங்களுக்குப் பிறகு கஷானி-யும் சிறையில் அடைக்கப்பட்டு, ஐந்தாண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர்கள் இருவரும் வெவ்வேறு சிறையில் அடைக்கப்பட்டு, ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், "ஒரு காலத்தில் நாம் கட்டாயம் ஒன்றாக வாழலாம்" என்று காதலோடு எதிர்பார்த்து இருந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களால் நேரில் சந்திக்க முடியாததால், அந்த ஜோடி தங்கள் வழக்கறிஞரின் உதவியுடனும் பெற்றோரின் அனுமதியுடனும் தொலைபேசி வாயிலாகத் திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்திருந்துள்ளனர். மேலும், அதேபோல அவர்கள் இருவரும் தொலைபேசியிலேயே திருமணமும் செய்துள்ளனர். கேஷனியின் குடும்பத்தினர், குர்ஆனின் ஒரு பிரதி, ஒரு குங்குமப்பூ கற்கண்டு மற்றும் ஒரே ஒரு சிவப்பு ரோஜா ஆகியவற்றை மட்டுமே அவர்களால் வழங்க முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த திருமணத்தால் கூட அவரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியவில்லை என்பதே வேதனையான விஷயம். தெஹ்ரானை தளமாகக் கொண்ட மனித உரிமை வழக்கறிஞர் அமீர்சலார் தாவூதி கூறியது, இது முழுக்க முழு அந்த பெண்ணின் முடிவு என்றும், இதை பற்றி தாவூதி, செபாஹி-யிடம் தெரிவித்தபோது அவர் மட்டுமின்றி சிறை அதிகாரிகளும் கூட கதறி அழுதுள்ளதாக அவர் பகிந்துள்ளார். மேலும், இவர்களின் திருமணம் நடந்த பின்னர் செபாஹி தூக்கிலிடப்பட்டுள்ளார். மேலும், அந்த ஒன்பது நிமிட திருமண விழா, சில காவல்துறை அதிகாரிகளையே கண்ணீர் சிந்த வைத்ததாக தாவூதி மேலும் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.