

அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி (56), ஈரானின் அடுத்த உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என இஸ்ரேலிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி 28 அன்று நடந்த அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் ஈரானின் மதகுரு அலி அயத்துல்லா கமேனி கொல்லப்பட்டார். மேலும் கமேனி உள்பட ஈரானின் 40-க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
காமேனி உடன், அவரது மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் கொல்லப்பட்டனர். கமெனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பாகர்சாதேவும் தாக்குதல்களின் போது ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகு இறந்தார். கமேனியின் இறந்த உடல் ஈரானின் புனித நகரமான மஷாத்தில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெஹ்ரானில் "பெரிய பிரியாவிடை விழா" நடைபெறும் என்றும் ஈரானின் புரட்சிகர காவல்படை வலைதள பதிவில் தெரிவித்துள்ளது. இருப்பினும், உடல் அடக்கம் செய்வதற்கான தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.
கடந்த 5 நாள்களாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில் இரு நாடுகளும் கூட்டு தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த பதட்டமான போர் சூழலில் ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்தெடுக்கபட்டுள்ளார் காமேனியின் இரண்டாவது மகன் மோஜ்தபா காமெனி.
ஈரானின் நிபுணர்கள் சபையால் அவர் காமேனியின் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 36 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காமெனியின் இறப்பிற்கு பின் மேலும் பதற்றமுற்றது ஈரான். இதனிடையே ஈரானின் புதிய உச்ச தலைவர் யார் என்பதில் ஏற்பட்ட குழப்பத்தில் ஈரான் அரசு நிபுணர்கள் சபையால் அவரின் மகன் மோஜ்தபா(56) தேர்தெடுக்குப்பட்டுள்ளார். தற்போது அயதுல்லா அலிரேசா அராஃபி, ஜனாதிபதி மசூத் பெஜேஷ்கியன் மற்றும் தலைமை நீதிபதி கோலம்ஹோசைன் மொஹ்சேனி எஜேய் ஆகியோர் அடங்கிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஈரானின் இடைக்கால தலைமைத்துவக் குழு, அடுத்த வாரிசு தேர்ந்தெடுக்கப்படும் வரை உச்சத் தலைவரின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளனர்.
வாரிசு அரசியலை வெகுகாலமாக எதிர்த்து வரும் ஈரான் அரசும் அதன் கொள்கைகளும், தந்தைக்குப் பின்னர் உச்ச தலைவராக மகனைத் தேர்வு செய்திருப்பது அரசின் கொள்கை குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மோஜ்தபாவை ஆதரிக்க மதகுருமார்களின் குழுவை இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை கடுமையான அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து ஈரானின் முழு கட்டுப்பாட்டையும் ஏற்கயுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.