
உலக புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு டிரம்ப் அரசாங்கம் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துவருகிறது. உலகம் முழுவதும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ், டொரன்டோ ஸ்கூல் ஆப் தாட், வரிசையில் ஹாவர்டும் மிக முக்கியமானதொரு பல்கலைக்கழகம் ஆகும். டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் ஒரு திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளது. இனி ஹாவர்டு பல்கலை -க்குள் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க கூடாது என்பது தான் அந்த உத்தரவு.இந்த உத்தரவால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் 6,700 வெளிநாட்டு மாணவர்களும் சிக்கலில் மாறியுள்ளனர்.
ஹாவர்டை ஏன் குறிவைக்கிறார் டிரம்ப்?
‘ஹாவர்டு பல்கலைக்கழகம் ஒரு ‘radical’ ஆன கல்வி நிறுவனம். சமூக பிரச்சனைகள் சார்ந்து பல்கலை வலகத்தினுள்ளோ அல்லது வெளியேயோ மாணவரக்ள் போராட்டத்தில் ஈடுபடுவதை ஆதரிக்கிறது என்ற குற்றச்சாட்டு தான டிரம்ப் நிர்வாகம் ஹாவர்டு பல்கலை மீது வைக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு.
குறிப்பாக சர்வதேச மாணவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலை எதிர்த்தும் போராட்டம் நடத்துவதை கட்டுப்படுத்தவும், மாணவர் சங்கங்களை ஆதரிப்பதை நிறுத்தவும் வேண்டும் என ஏற்கனவே டிரம்ப் அரசாங்கம் கேட்டுக்கொண்டது. இதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தியது.ஆனால், டிரம்ப் அரசின் உத்தரவுக்கு அடிபணிய மாட்டோம் என பல்கலைக்கழக தலைவர் ஆலன் கார்பர் கூறிய சில மணி நேரத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் ரூ.19,000 கோடி நிதி உதவியை நிறுத்துவதாக டிரம்ப் அரசு நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த பிரச்சனையை நாங்கள் நீதிமன்றத்தில் டீல் செய்வோம் என கூறி ஹாவர்டு பல்கலை சொல்லிவிட்டது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை, அமெரிக்க அரசு, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திடமிருந்தது சர்வதேச மாணவர்களை சேர்க்கும் உரிமையை பறித்துள்ளது, இந்த முடிவு, வியாழக்கிழமை, Department of Homeland Security (DHS) மூலம் அறிவிக்கப்பட்டது, மேலும் பல்கலைக்கழகத்தின் வளாகக் கொள்கைகளின் மீது அதிகமான அழுத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
பன்முகத்தன்மை, சமஉரிமை, ஒன்று சேர்த்தலை குலைக்க வேண்டும்!
“பாலஸ்தீனத்தின் மீது நிகழ்த்தப்படும் பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களை ஒருங்கிணைப்பது, பல்கலைக்கழக வளாகத்தில் யூத மாணவர்கள் மீதான தாக்குதல், கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்களை பல்கலைக்கழக வளாகத்தில் ஒருங்கிணைப்பது என ஹாவர்டு பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தான் பொறுப்பு. அமெரிக்க அரசாங்கத்துக்கு யார் நாட்டுக்குள் வருகிறார்கள் என்பது குறித்து அறிவதற்கான அதிகாரம் உள்ளது. ஹாவர்டு பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க தடை செய்யப்படுகிறது என DHS தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், DEI (Diversity, Equity, and Inclusion) என்று சொல்லப்படுகிற திட்டங்களை கலைக்க வேண்டும், என்ற அமெரிக்க அரசின் உத்தரவுகளை நிராகரித்ததன் விளைவையே தற்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதன் நீட்சியாக DHS மற்றும் National Institutes of Health உட்பட பல அமெரிக்க அமைப்புகள், Harvard மற்றும் அதன் ஆராய்ச்சி உறுப்பினர்களிடம் $2.6 பில்லியன் மதிப்புள்ள நிதிகளை நிறுத்தியுள்ளன. இதற்கு பதிலடி தரும் விதமாக, Harvard, நிதி தடைகள் மற்றும் அதன் ஆட்சி கொள்கைகளை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய மாணவர்களின் நிலை என்ன?
ஆண்டு தோறும் 600 -லிருந்து 800 இந்திய மாணவர்கள் இந்த பல்கலையில் கல்வி பயின்று வருகின்றனர். அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பால் தற்போது அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
2025-36 ஆம் கல்வி ஆண்டிலிருந்துதான் இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எனவே இந்த ஆண்டு படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பட்டம் பெறுவதில் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் மற்ற மாணவர்கள் எதிர்காலம் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்தே அமையும், ஒருவேளை தீர்ப்பு பழக்களிக்கு ஆதரவாக அமைந்தால் மாணவர்கள் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில் இந்த உத்தரவை அறிவித்த அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரி கிரிஸ்டி நோம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், 72 மணி நேரத்துக்குள், மாணவர்களின்டவடிக்கைகள், போராட்ட சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத செயல்பாடுகளை விவரிக்கும் ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களின் மாணவர் மற்றும் பரிமாற்ற பயணிகள் திட்ட (SEVP) சான்றிதழை மீண்டும் பெற முடியும் எனக்கூறியுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு என்ன?
ஹார்வர்ட் பல்கலைக்கழகம், இந்த முடிவை “சட்டவிரோதமானது, அதன் கல்வி சுதந்திரத்திற்கு எதிரானது” என கண்டித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் ஆலன் கார்பர், "எந்த அரசும் தனியார் பல்கலைக்கழகங்கள் என்ன கற்பிக்க வேண்டும், யாரை சேர்க்க வேண்டும், யாரை பணியமர்த்த வேண்டும், மற்றும் எந்த துறைகளில் படிப்பு மற்றும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதை கட்டுப்படுத்தக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலவரம்,கல்வி நிறுவனங்களின் சுதந்திரம் மற்றும் அரசின் தலையீடு பற்றிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்