சென்னையில் உள்ள DTDC தனியார் கொரியரில் பணம் வந்துள்ளதாகவும் அதை வாங்க வந்த சென்னை வேளச்சேரி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த 30-வயதான சதீஷ் என்பவர் பார்சல் எனது இல்லை என கூறி அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
கொரியரில் பணம் அனுப்ப தடை விதித்த நிலையில் கொரியரில் வந்த பணத்தை சதீஷ் முன்பு கொரியர் நிறுவனம் ஸ்கேன் செய்தபோது அவருக்கு வந்த பார்சல் அவரது இல்லை என கூறி ஓடியதை கொரியர் ஊழியர்களுக்கு பலத்த சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து, இதுகுறித்து கிண்டி காவல் உதவி ஆணையர் சிவாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் கொரியர் அலுவலகத்திற்கு சென்ற உதவி ஆணையரின் தனிப்படையினர் பார்சலில் வந்த பணத்தை பிரித்து சோதனை செய்ததில் கொரியரில் வந்த பணம் கள்ள நோட்டு என்பதை உறுதி செய்துள்ளனர். 200 ரூபாய் 8 நோட்டுகள், 100 ரூபாய் 69 நோட்டுகள் என ரூபாய் 8500 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் கொரியரில் உள்ள தொடர்பு எண்ணை வைத்து பார்த்தபோது அது பார்சல் வாங்காமல் ஓடிய சதீஷ் என்பதை உறுதி செய்தனர்.
பின்னர் சதீஷை கைது செய்த தனிப்படையினர் அவரை வேளச்சேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது ஹைதராபாத்தை சேர்ந்த சுஜித் என்பவரிடம் இன்ஸ்டாகிராமில் பழகி பின்னர் வாட்ஸ்ஆப்பில் பேசி 1000 ரூபாய் கொடுத்தால் 5000 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் தருவதாக சுஜித் கூறியதை தொடர்ந்து வேளச்சேரியை சேர்ந்த சதீஷ் சுஜித்துக்கு நள்ள நோட்டுகளை அனுப்பியதும் அவரிடமிருந்து கள்ள நோட்டுகளை தனியார் கொரியர் மூலம் ஹைதரபாத்திலிருந்து அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு நள்ள நோட்டுகளை சம்பாதிக்கும் நோக்கத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக கூறியதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து சதீஷிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட சதீஷ் போன்று வேறு யாரேனும் திட்டம் தீட்டியுள்ளனரா என்ற கோணத்திலும் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.