ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சங்காபிஷேகம் மற்றும் சுமங்கலி பூஜை...

கும்பாபிஷேகம் செய்யப்பட்ட ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு பூஜையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சங்காபிஷேகம் மற்றும் சுமங்கலி பூஜை...

காஞ்சிபுரம் | ஸ்ரீபெரும்புதூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது. கடந்த ஒரு வருடமாக இக்கோவிலின் திருப்பணிகள் நடந்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 10 ம் தேதி முதல் கணபதி ஹோமம் பூஜையுடன் துவங்கி கும்பாபிஷேகம் நடந்தது.

இத்திருக்கோயிலுக்கான குடமுழுக்கு விழா 4 கால பூஜைகளுடன் துவங்கி 12 ஆம் தேதி காலை வேத மந்திரங்கள் முழங்க அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின், தினமும் மண்டல பூஜை நடைபெற்ற நிலையில், இன்று 48 வது நாளில் மண்டலாபிஷேக நிறைவு பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கோவிலின் மூலவரான அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பின்  தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மேலும் மண்டலாபிஷேக நிறைவு பூஜையை முன்னிட்டு சுமங்கலி பூஜை செய்யப்பட்டு சுமங்கலி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது. இதில் காஞ்சிபுரம், ஶ்ரீபெரும்புதூர், சென்னை, திருவள்ளூர், மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெருந்திரளான பக்தர்கள்  கலந்து கொண்டு அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com