மார்க்கெட்டில் நடந்த கொலையின் எதிரொலி... கடையடைப்பில் ஈடுபட்ட வணிகர்கள்...

விழுப்புரம் மார்க்கெட் பகுதியில் கஞ்சா போதையில் கத்தியால் குத்தி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக இன்று வணிகர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்கெட்டில் நடந்த கொலையின் எதிரொலி... கடையடைப்பில் ஈடுபட்ட வணிகர்கள்...
Published on
Updated on
2 min read

விழுப்புரம் | ஜி ஆர் பி தெருவை சேர்ந்தவர் ஞானசேகர் இவர் எம்ஜி ரோடு பகுதியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன்கள் ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய இரண்டு நபர்கள் இன்று மாலை கஞ்சா போதையில் விழுப்புரம் மார்க்கெட் பகுதியில் கத்தியை வைத்துக்கொண்டு மார்க்கெட் பகுதியில் செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனை தட்டிக் கேட்கும் நபர்களை அடித்தும் கத்தியால் கீரியும் அச்சுறுத்தி வந்தபடியே விழுப்புரம் எம் ஜி ரோடு மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கி அராஜகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் எம் ஜி ரோடு ஜோதி விருட்சம் பல்பொருள் அங்காடியில் இரண்டு நபர்கள் சண்டை இட்டு கொண்டிருந்த பொழுது அங்கு வந்த இப்ராஹிம் என்ற நபர் சண்டையிட்டு கொண்டிருந்த  நபர்களை தடுத்து நிறுத்தி உள்ளார். ஆத்திரம் உற்ற ராஜசேகர் மற்றும் வல்லரசு இப்ராஹீமை கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் படுகாயம் முற்று ரத்த வெள்ளத்தில் பல்பொருள் அங்காடிகள் சரிந்து விழுந்த அவர் அவசர  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய இரண்டு நபர்கள் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இன் நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் இன்று காலை முதல் மாலை 4 மணி வரை விழுப்புரம் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டு இன்று காலை முதல் 95 சதவீத கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் விழுப்புரம் எம் ஜி ரோடு மார்க்கெட் பகுதி, நேருஜி வீதி உள்ளிட்ட  பகுதியில் உள்ள கடைகள் பூட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளதால் சாலைகள் வெறிச்சோடி கிடைக்கின்றன. இந்த கடை அடைப்பு போராட்டம் ஆனது மாலை 4 மணி வரை நடைபெறும் என வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வணிகர்கள் அனைவரும் கத்தியால் குத்தப்பட்டு இறந்த இப்ராஹிம் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவும் உள்ளனர். இதனால் விழுப்புரத்தில் பதட்டமான சூழ்நிலை உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com