‘துணிவு’க்கு போட்டியாக ‘வாரிசு’ வருகிறார்! இன்னும் இரண்டு பாடல்கள் தான்!

வாரிசு படத்தின் கடைசி ஷெடியூல் நாளை துவங்க இருக்கிறதாம்! படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளது.
‘துணிவு’க்கு போட்டியாக ‘வாரிசு’ வருகிறார்! இன்னும் இரண்டு பாடல்கள் தான்!

வாரிசு என்ற படம் தற்போது விஜய் நடிப்பில் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வருகிறது. தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில், விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது படபிடிப்பு முடியப்போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் படு குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு?

சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம், எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், விஜய் ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் படம் தான் ‘வாரிசு’ அல்லது ‘வாரிசுடு’ (தெலுங்கு). ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத் குமார் மற்றும் பல பெரும் நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட் வருகிற செப்டம்ர் 27ம் தேதி வரும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு நாளை துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “படத்தின் லாஸ்ட் ஷெடியூள் நாளை துவங்குகிறது. இன்னும் இரண்டு சீக்வன்சுகளும், இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்டும். பிரம்மாண்டமான ‘வாரிசு பொங்கலுக்கு’ காத்திருங்கள்” என பதிவிட்டிருந்தது. இதற்கு ரசிகர்கள் தீ பறக்கும் இமோஜிகள் போட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

இன்று காலை தான் ஏகே 61 படத்தின் படபிடிப்பு முழுமையாக முடித்து விட்டு அஜித் குமார் விமான நிலையத்தில் ரசிகர்களுக்கு காட்சியளித்தார். கம்பீரமான, “துணிவு” என்ற தலைப்பு வெளியாகி, அஜித் ரசிகர்களை அப்படக்குழு உற்சாகக் கடலில் ஆழ்த்திய நிலையில், விஜயின் இந்த அப்டேட், விஜய் ரசிகர்களுக்கு படு குஷியைக் கொடுத்துள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிரகு, மீண்டும் தீப்பறக்கும் போட்டி, அஜித் மற்றும் விஜய்க்கு இடையில் உருவாகியுள்ளது நன்றாக வெளிப்பட்டு வரும் நிலையில், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் திக்குத்திசை தெரியாமல் உற்சாகத்தில் தத்தளித்து வருகின்றனர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com