6 டெம்போ லாரிகள் கணக்கில் நிரம்பி வழிந்த காலணிகள்!!!

6 டெம்போ லாரிகள் கணக்கில் நிரம்பி வழிந்த காலணிகள்!!!

செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில், மிகப் பெரிய இந்து பண்டிகை என்பது பிள்ளையார் சதுர்த்தியாகத் தான் இருந்தது. தென்னிந்தியாவில் மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது, வடமாநிலங்களில் சுமார் 10 நாட்களாகக் கொண்டாடப்படும். மேலும், வட இந்தியாவின் மிக முக்கிய பண்டிகையாகவும் இது பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

களிமண்ணால் செய்த பிள்ளையார்களை, 10 நாட்கள் வரை பூஜித்து பின் அவற்றை நீர்நிலைகளில் கரைப்பது தான் இந்த பண்டிகையின் வழக்கம். விநாயகரின் மிக அதீத பக்தர்கள் நிரைந்த பகுதிகளில், மகாராஷ்டிர மாநிலத்தின் நகரங்கள் தான் முதலிடம் பிடிக்கிறது என்று சொல்வதில் எவ்வித தவறும் இல்லை. அந்த நிலையில், மகாராஷ்டிராவின் பூனேவில், கடந்த வாரம் வெகு விமர்சையாக நடந்த இந்த கணபதி விசர்ஜன் எனப்படும் பிள்ளையார் கரைக்கும் விழாவானது, சோசியல் மீடியாக்கள் முழுவதும் பரவியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பண்டிகை முடிந்த நிலையில், அப்பகுதிகளை சுத்தம் செய்த அம்மாநகராட்சி அலுவலகம், பல்லாயிரம் செருப்புகளை மீட்டுள்ளதாம். கடந்த செப்டம்பர் 9ம் தேதி சுத்தப்படுத்த துவங்கிய நிலையில், தற்போது வரை, காலணிகள் மட்டுமே 6 டெம்போ லாரிகள் நிரைய மீட்கப்பட்டதாக, பூனே மாநகராட்சியின் (பிஎம்சி) திட்டக்கழிவு துறை (எஸ்டபிள்யூஎம்) தகவல் வெளியிட்டுள்ளது.

சுமார் 1,307 பிஎம்சி அதிகாரிகள் சாலைகள் முழுவதும் உள்ள குப்பைகளை நீக்கும் பணியில், கிட்டத்தட்ட 29 மணி நேரமாக, வெள்ளிக் கிழமை மற்றும் சனிக்கிழமை வேலை செய்ததில் இத்தனை காலணிகள் தனியாக குப்பைகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு, 6 டெம்போ லாரிகளில் எடுத்து வரப்பட்டதாகத் தெரிவித்தனர். அது மட்டுமின்றி, சுமார் 5 லட்சம் மக்கள் கலந்து கொண்ட இந்த விழ்ழவில் இருந்து 33 டன்கள் குப்பைகளும், 21 டன்கள் மலர்மாலைகளும் சேகரிக்கப்பட்டதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

லட்சுமி சாலை, திலக் சாலை, கும்தேகர் சாலை, நாராயண் பேட் சாலை, பாஜிராவ் சாலை, சிவாஜி சாலை, அல்கா சௌக், கந்துஜி பாபா சௌக், கார்வே சாலை, ஜங்லி மகாராஜ் சாலை, சேனாபதி பாபட் சாலை, கணேஷ்கிந்த் சாலை, பெர்குசன் கல்லூரி சாலை, பிரபாத் சாலை, பண்டார்கர் சாலை மற்றும் புனே-மும்பை சாலை வழியாக ஊர்வலம் சென்றது. இப்பகுதிகளை சுத்தப்படுத்த, 13 சிறிய வாகங்கள், 6 டெம்போக்கள், 36 குளுட்டன் உறிஞ்சும் இயந்திரங்கள், எட்டு டிப்பர்கள் மற்றும் எட்டு வாகனங்களைப் பயன்படுத்தியது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com