நீலகிரி பாரம்பரிய பழங்குடி மருத்துவத்துக்கு தேசிய விருது...

பெங்களூரில் நடந்த மாநாட்டில், நீலகிரி பாரம்பரிய பழங்குடி மருத்துவத்தை உபயோகிக்கும் காளியம்மாளுக்கு, தேசிய விருது கொடுத்து கவுரப்படுத்தினர்.

நீலகிரி பாரம்பரிய பழங்குடி மருத்துவத்துக்கு தேசிய விருது...

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கரிக்கையூர் இருளர் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்தவர் காளியம்மாள், அவருக்கு வயது 60.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ஆயுர்வேதா பார்வை 2047' என்ற தலைப்பில், பல்துறை சுகா தார விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்லைக்கழகம் சார்பில், தேசிய அளவிலான மாநாடு கடந்த, செப்டம்பர் 25 நடந்தது.

மேலும் படிக்க | நில்லு டா திமிர திமிர நில்லுடா.. 2டி எண்டெர்டெயின்மெண்ட் வெளியிட்ட சூர்யா-ஜோதிகா வீடியோ..!

அதில், நீலகிரி பழங்குடியின கிராமங்களில் மருத்துவ சேவையாற்றி வரும் காளியம்மாள், அப்பகுதியில் உள்ள பச்சிலை, வேர் உள்ளிட்ட மூலிகை வாயிலாக, பக்க விளைவு இல்லாத, 100க்கும் மேற்பட்ட நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளார் என்பது குறித்து, ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்தப்பட்டது.

கலாசாரத்துறை சார்பில், தொடர்ந்து, மத்திய டாக்டர் மூர்த்தி, நிகழ்ச்சி குழு தலைவர் டாக்டர் ஹரிராமமூர்த்தி ஆகியோர், காளியம்மாளுக்கு, 'தன் வந்திரி' என்ற தேசிய விருது வழங்கினர். இந்த விருதால் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | இலக்கியத்திற்கான நோபல் பரிசு யாருக்கு...?

மேலும் பாஜக கீழ் கோத்தகிரி ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமையில் பொன்னாடை  அணிவித்து கௌரவிக்கப்பட்டது. காளியம்மாள்  கூறுகையில் மூலிகை வைத்தியத்தை அரசு  காக்க வேண்டும் எனவும் மேலும் தங்களுக்கு உரிய இடம் கொடுத்து அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எடுத்துள்ளார்.

மேலும் படிக்க | வேதியியலுக்கான நோபல் பரிசு வெல்லும் நோபல் நாயகர்கள் யார் ..?