
மத்திய பிரதேசத்தின் பன்னா புலிகள் காப்பகத்தில் புலி ஒன்று சாலையை கடக்கும் போது ஆபத்தை உணராத இளைஞர்கள் சிலர் அதனை செல்போனில் வீடியோ எடுத்தும், செஃல்பி எடுத்தும் விளையாடியுள்ளனர்.
இந்த வீடியோவை வெளியிட்டுள்ள வனத்துறை அலுவலர் சுசந்த நந்தா, இது போன்ற அபாயகரமான செயல்களை கைவிடுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | ஒரே சேலையில் இருவர் தற்கொலை...! கள்ளகாதலால் நடந்த விபரீதம்..!
வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சுசந்த நந்தா, “நீங்கள் புலி போன்ற ஒரு பெரிய மாமிச உண்ணியைப் பார்த்தால், அது, தன்னை மக்கள் பார்க்க விரும்புகிறது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அவை ஒருபோதும் துரத்தப்பட விரும்பியதில்லை. புலி உங்களை அச்சுறுத்தி கொன்றுவிடும். தயவுசெய்து இந்த மோசமான நடத்தையை கைவிடுங்கள்” என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பலரும், தங்களது கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ஒருவன் எப்படி செல்ஃபீ எடுக்க யோசிக்கின்றனர்.. என்றும், எப்படியெல்லாம் அறிவற்றவர்களாக நடந்து கொள்கின்றனர் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த் அபதிவு தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.