இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டமா?

இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டமா?
Published on
Updated on
1 min read

இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்கள், குடிமைச் சமூக அமைப்புகள் உள்ளிட்ட மேலும் பலர் இணைந்து பத்தரமுல்லையில் உள்ள தியதஉயன பகுதியில் இந்த  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

நீதிக்கான போராட்டம்

கறுப்பு உடைகள் அணிந்து போராட்டக்காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மக்களுக்கு நீதி  வேண்டும்! அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும், இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களுக்கு நிவாரணம் வழங்காத இந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற தொணிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

போராட்டக்காரர்களை விடுதலை செய்ய கோரிக்கை

மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும், அடிப்படையான உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என தெரிவித்தும்,  விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காலி முகத்திடல் போராட்டக்காரர்களை விடுதலை செய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com