தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களும் இணைந்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், அதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.