பேரறிவாளன் விடுதலையை திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடும் நிலையில் கூட்டணியில் நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 31 ஆண்டுகளுக்குப் பின் பேரறிவாளன் விடுதலையானதை அடுத்து, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கொண்டாட்டம் களை கட்டியது.
இலங்கையில் ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவுநாளில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு தமிழின ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.