

அன்பார்ந்த மாலை முரசு வாசகர்களே... இடத்தை வாங்கி விற்பது அதன் மூலம் வருவாய் ஈட்டுவது... இதற்கென்று தனி கிரகங்களும் அந்த கிரகங்களின் வலிமையும் ஒருவரின் ஜாதகத்தில் பிரத்தியேகமாக இருந்தால் வீடு கட்டுவது நிலம் வாங்குவது விற்பது வீட்டை பேசி முடிப்பது போன்ற தொழில்கள் அவர்களுக்கு சிறப்பாக இருக்கும்...
2025 முடியப் போகிறது கிட்டத்தட்ட 2026க்குள் நுழைய நாம் தயாராகி விட்டோம்.. இந்த காலகட்டத்தில் நிச்சயமாக உங்களுடைய ராசிக்கு அந்த அமைப்பு இருக்குமானால் நீங்கள் அந்த துறையை தேர்ந்தெடுத்து செய்ய வாய்ப்பு இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு யோகம் உண்டு...
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே ராசி நாதனே செவ்வாயாக வருகிறார்.. நிலத்திற்கும் வீட்டிற்கும் அதிபதி செவ்வாய் தான்... மிகவும் கடினமான பொருட்களுக்கு சொந்தக்காரர் எடுத்துக்காட்டு செங்கல்.... திரவ பொருட்கள் கடக ராசிக்கு சொந்தமானவை காரணம் கடகம் ஒரு பார் கடல்... கடினமான பொருட்கள் அனைத்தும் செவ்வாய்க்கு சொந்தமானது... அதனால் தான் மேஷ ராசிக்கு அதிபதியான செவ்வாய் மகர ராசியான கல் வீட்டில் உச்சம் பெறுவார்.... அதே போல் தண்ணீருக்கு சொந்தமான சந்திரன் கடக ராசியில் ஆட்சி பெறுவார்....
ஒன்றுக்கும் எட்டாம் வீட்டுக்கும் அதிபதியான செவ்வாய் 2026 ஆம் ஆண்டு நிச்சயமாக மேஷ ராசிக்கு மிக சிறப்பான பலன்களை குறிப்பாக திடீர் தன வரவை உண்டாக்கக்கூடிய சக்தி உடையவராக இருக்கிறார்... காரணம் வருகின்ற காலங்களில் செவ்வாய் விருட்சகம் தனுசு உச்சவிடான மகரம் கும்பம் மீனம் மேஷம் என்று பிரமாதமான வீடுகளில் பயணிக்க இருக்கிறார்.. அந்த வீடுகள் எல்லாம் மேஷத்திற்கு தொழில் மற்றும் லாபம் போன்ற அமைப்புகளில் இருக்கும் என்பதால் நிச்சயமாக 2026 ஆம் ஆண்டு மேஷ ராசிக்கு செவ்வாயின் அமைப்பு மூலம் நல்ல வருமானம் ஈட்டக்கூடிய சக்தி உருவாகும்...
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தான அதிபதி மேசமாக வருகிறது செவ்வாயாக வருகிறார்.. பொதுவாகவே கடக ராசியினர் தாய் உள்ளம் கொண்டவர்களாக இருப்பினும் அவர்கள் செய்கின்ற வேலை மிகவும் கடினமாக இருக்கும்.... உதாரணமாக தாயே குழந்தைகளை பராமரித்து பாசத்தோடு வளர்த்து பள்ளிக்கு கொண்டு விடுவது மீண்டும் பள்ளியில் இருந்து கொண்டு வருவது பாடங்களை சொல்லித் தருவது அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் பார்த்துக் கொள்வது போன்ற பிசிகல் ஆக்டிவிட்டீஸ் உடல் உழைப்பை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் அதனால் தான் உங்களுடைய புத்திர வீடும் செவ்வாய் வீடான விருச்சகமாக வருகிறது தொழில் வீடும் செவ்வாயின் வீடான மேசமாக வருகிறது.... இரண்டு வீடுமே செவ்வாய்க்கு தொடர்புடையது அதாவது குழந்தை பெறும் செவ்வாயின் வீட்டோடு தொடர்பு வருகிறது தொழில் வீடான மேஷமும் செவ்வாயோடு தொடர்பு பெறுகிறது...
குழந்தைகளும் பெரிய பெரிய பதவிகளில் அமர்வது போல சாமர்த்தியமாக வளருவார்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள் அரசியலில் ஈடுபடுவார்கள் விளையாட்டு துறையில் ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள் உடனடியாக வாழ்க்கையில் எதையுமே எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தோடு உழைத்துக் கொண்டே இரு ஒருநாள் வெற்றி நிச்சயம் என்ற இலக்கோடு கடக ராசியின் பிள்ளைகள் செயல்படுவார்கள்... இப்படிப்பட்ட கடக ராசி அமைப்பில் இருக்கு ரியல் எஸ்டேட் தொழில் வரக்கூடிய 2026 இல் சிறப்பாக இருக்கிறது... நல்ல நீர் நிலைக்கு அருகாமையில் இருக்கக்கூடிய இடம் ஆனாலும் சரி மலைகள் அதை சார்ந்த இடங்களில் இருக்கக்கூடிய இடங்கள் ஆனாலும் சரி... சமதளத்தில் இருக்கக்கூடிய இடங்கள் ஆனாலும் சரி நீங்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் அதன் மூலம் வருமானத்தையும் லாபத்தையும் பார்க்கலாம்... ரியல் எஸ்டேட் தொழில் பொறுத்த வரை இன்றைக்கு எந்த ஒரு காரியமும் நடந்து விடாது வாழ்க்கையில் பொறுமையாக இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு கடக ராசி அமைப்பினரும் ஒரு உதாரணம்.... நல்ல வளர்ச்சியோடு செயல்படுங்கள் நிச்சயமாக 2026 ஆம் ஆண்டு கடக ராசிக்கு ஒரு நல்ல அமைப்பாக இருக்கும்...
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசியிலேயே செவ்வாய் உச்சம் பெறுவதால் நிச்சயமாக வருகின்ற 2026 ரியல் எஸ்டேட் தொழிலில் நீங்கள் கொடி கட்டி பறக்கக்கூடிய வாய்ப்புள்ளது குறிப்பாக டிசம்பர் மாதத்திற்கு பிறகு நல்ல அமைப்பில் செவ்வாய் விருட்சகத்தில் ஆட்சி பீடத்தில் அமருகிறார்... மகர ராசிக்கு 11 ஆம் வீடான விருச்சக ராசியில் செவ்வாய் ஆட்சி பெறுவது ரியல் எஸ்டேட் வீடு கட்டுதல் வாங்குதல் போன்ற இடங்களில் மிக செழிப்பான வருமானத்தை கொண்டு வரும்... அதேபோல் மகர ராசிக்கு நான்காம் இடமாக செவ்வாயின் வீடாகவே வருவதால் நிச்சயமாக இடம் சம்பந்தப்பட்ட வேலைகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.... இடைத்தரகராக செயல்படும் பொழுது நீங்கள் மற்றவரை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை இரண்டு தரப்பையும் கலந்து பேசி நீங்களே ஒரு நல்ல முடிவை எடுத்துக் கொள்ளலாம்.... இப்படியாக ஜனவரி பிப்ரவரி மார்ச் போன்ற மாதங்களில் செவ்வாய் தனுசு ராசி, மகர ராசி கும்ப ராசி என்று வருடம் முழுவதும் சுமார் ஏழு எட்டு மாதங்கள் உங்களுக்கு சாதகமான வீடுகளில் தான் பயணிக்கிறார் எனவே தாராளமாக ரியல் எஸ்டேட் தொழில் உங்களுக்கு கை கொடுக்கும்...
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே கடக ராசி எப்படி தாய் உள்ளம் கொண்டவர்களோ அதே போல நீங்கள் உங்கள் குடும்பத்தை மட்டும் பார்க்காமல் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் தாய் உள்ளம் கொண்டு பார்த்து அவர்களை பராமரிப்பதிலும் பார்த்துக் கொள்வதிலும் மிக அக்கறையாக இருப்பீர்கள்... சுயநலமாக இல்லாமல் பொது நலமாக இருப்பீர்கள்... ஆகையால் தான் உங்களுக்கு செவ்வாய் பகவான் இரண்டுக்கும் ஒன்பதுக்கும் அதிபதியாகி 11ல் உச்சம் பெறுகிறார்... கடின உழைப்பாளி நீங்கள் ஒருவருக்காக உழைத்தால் பரவாயில்லை நீங்கள் ஊருக்காக உழைக்கும் ஒரு உன்னத உழைப்பாளி... உங்களுக்கும் ரியல் எஸ்டேட் பிசினஸ் நிச்சயமாக வருகின்ற 2026 இல் கை கொடுக்கும் நல்ல விதத்தில் உங்களுக்கு அமையும்...
மேலே சொன்ன ராசியினர் ரியல் எஸ்டேட் தொழில் எடுத்து செய்யலாம் அதற்கு முக்கியமாக எம்பெருமான் முருகப்பெருமானை நீங்கள் இருக பற்றி கொண்டு அவரை பிரதானமாக வைத்து அவரை வழிபட்டு செவ்வாய் தோறும் அசைவம் சாப்பிடாமல் மனதார நினைத்து வரும் பொழுது நிச்சயமாக இந்த ரியல் எஸ்டேட்டில் நீங்கள் கொடி கட்டி பறந்து ஒரு தொழிலாளியில் இருந்து முதலாளியாக மாற 100% வாய்ப்பு உண்டு...
வாழ்க வளமுடன்!!!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.