“ வயசுலா ஒரு மேட்டரா சார்?” இவருக்கு பேட்டை எடுத்தா சிக்ஸரு தான் அடிக்கணும்..! கிரவுண்ட்ல நின்னு மேஜிக் காட்டிட்டாப்ல..!

"இதற்கு முன்பு சச்சின் மட்டுமே இப்படி ஆடினார்” என்ற புகழாரங்கள் ஒலித்துக்கொண்டிருந்தன...
Vaibhav suriya vanshi
Vaibhav suriya vanshi
Published on
Updated on
2 min read

நேற்று இரவு ராஜஸ்தான் மைதானத்தில் “இது ஒரு வரலாற்று சாதனை.. நம் கண்கள் பார்ப்பது நம்ப முடியாத ஒரு காட்சி, நாம் சமகால வரலாற்றின் சாட்சியங்களாக இருக்கிறோம்.. இதற்கு முன்பு சச்சின் மட்டுமே இப்படி ஆடினார்” என்ற புகழாரங்கள் ஒலித்துக்கொண்டிருந்தன..

இந்த வார்த்தைகள், புகழாரங்கள் எல்லாம் அந்த 14 வயது இளம் வீரருக்கு புரியுமா என்று கூட தெரியவில்லை.. அந்த இளம் வீரர் ஐபிஎல் வரலாற்றில் யாருமே செய்யாததை செய்திருக்கிறார். வெறும் முப்பது ஐந்தே பந்துகளில் ( 35/ 100 )சதம் விளாசிய இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி…

இந்திய, ஆங்கில வர்ணனையாளர்கள், வீரர்களும்  ஏன் நாடே கூட இன்று முழுக்க அவரைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தது…

வைபவ் சூர்யவன்ஷி, பீகாரைச் சேர்ந்த 14 வயசு (2011-ல பிறந்தவர்) கிரிக்கெட் வீரர். இப்போ எட்டாவது கிளாஸ் படிக்கும்  இவரு, ஐபிஎல் 2025-ல ராஜஸ்தான் ராயல்ஸ் டீம் -காக அறிமுகமாகி, ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயது வீரராக  பல புது சாதனை பண்ணிட்டு இருக்காரு... இவரோட இடது கை பேட்டிங் ஸ்டைல், யுவராஜ் சிங்கின் ஆரம்ப கால ஆட்டத்தை நினைவுபடுத்தியது. ராஜஸ்தான் இவரை ₹1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது, இது ஒரு பெரிய ரிஸ்க், ஆனா வைபவோட டேலன்ட் அதுக்கு மேல!

அவரது கிரிக்கெட் பயணம் சும்மா சினிமா ஸ்டோரி மாதிரி. 2024-ல கூச் பீகார் ட்ராஃபி (Under-19) டூர்னமென்ட்ல, 15-19 வயசு வீரர்களுக்கு எதிரா செஞ்சுரி அடிச்சு அசத்தினார். இந்த சாதனை, இவரை ஐபிஎல் டீம்களோட ரேடார்ல கொண்டு வந்தது. பீகார்ல இருந்து இப்படி ஒரு இளம் டேலண்ட் வருவது, இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு பெரிய பூஸ்ட்!

35 பாலில் 100 ரன்!

18 வது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், குராஜாராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன..ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதனால் பேட்டிங் செய்த குஜராத் அணி 4 விக்கட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 82 ரன்களும் பட்லர் 50 ரன்களும் சேகரித்தனர்.

210 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்ய துவங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும், வைபவ் சூரியவன்ஷியும் களம்  இறங்கினர்.  சுழன்று சுழன்று ஆடிய வன்ஷி..கிரவுண்டில் சிக்ஸர் மழையையும், பவுண்டரி மழையையும் பொழிந்தார். 11 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் என அடித்து தள்ளி இளம் வயதில் 35 பாலில்  ஐபிஎல் போட்டியில் சத்தம் வென்ற வீரர் என்ற பெரும் சாதனையை படைத்தார்.  அதே போல் ஐபிஎல் வரலாற்றில் கிறிஸ் கெய்லுக்கு பிறகு (30 பந்துகளில் சதம்) அதிவேக சதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனைக்கும் வைபவ் சொந்தக்காரர் ஆகியுள்ளார். 

பாராட்டு மழையில் வன்ஷி!

இந்த அசாதாரண ஆட்டத்தை உலகமே புகழ்ந்து வருகிறது.. சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, முகம்மது ஷாமி, விராட் கோழி, யுவராஜ் சிங் உள்ளிட்ட பலர் வன்ஷியை பாராட்டி வருகின்றனர்.

சச்சின் டெண்டுல்கர்  "பயமே இல்லாத அணுகுமுறை வைபவ் உடையது. பேட்டின் வேகம், பந்து வரும் தூரத்தை சற்று முன்பே கணித்து அணுகுவது, என எல்லாம் சேர்த்து ஒரு அற்புதமான இன்னிங்ஸாக அமைந்தது. நன்றாக ஆடினாய்” என்று பாராட்டி உள்ளார்..

இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 15 வயதில் இப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என வருணனையாளர்கள், ஒரு கிரிக்கெட் ஜாம்பவானுடன் ஒப்பிட்டுள்ளார்.. ஆனால் வன்ஷி இந்த ஒப்புமைக்கு தகுதியானவரே ஆவார். 

14 வயதில்  ஐபிஎல்-ல ஆடுறது, இதுக்கு முன்னாடி யாரும் செய்யாத சாதனை. அதுவும், பீகாரில் இருந்து ஒரு வீரர் ஐபிஎல்-ல பிரகாசிக்கிறது, அந்த மாநிலத்து இளைஞர்களுக்கு பெரிய மோட்டிவேஷன்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com