சரி.. சரி.. பொட்டி படுக்கையெல்லாம் மூட்ட கட்டுங்க.. "இருங் பாய்" - CSK Play-Off வாய்ப்பு.. இன்னும் இருக்கு பாஸ்!

CSK-வுக்கு பிளே ஆஃப் போக, ஒரு சின்ன வாய்ப்பாவது இருக்கா? வாங்க பார்க்கலாம்.
csk lose the match and unqualified semi-finals
csk lose the match and unqualified semi-finals
Published on
Updated on
3 min read

"அப்புறம் என்னப்பா. .சொந்த பந்தங்களுக்கெல்லாம் சொல்லியாச்சா? Body-ய தூக்கிடலாமா" என்று மும்பை உள்ளிட்ட மற்ற அணிகளின் ரசிகர்கள் நேற்று இரவு முதல் தாறுமாறாக கலாய்த்து வர, வாயில் துணியை வைத்துக் கொண்டு, ஒன்றும் சொல்ல முடியாமல், பீறிட்டு வரும் கண்ணீரை அடக்கிக் கொண்டு உட்கார்ந்துள்ளனர் சிஎஸ்கேவின் தீவிர ரசிகர்கள். சரி.. அது ஒருபக்கம் இருக்கட்டும்.. CSK-வுக்கு பிளே ஆஃப் போக, ஒரு சின்ன வாய்ப்பாவது இருக்கா? வாங்க பார்க்கலாம்.

நேற்று MI-க்கு எதிராக நடந்த போட்டியில், CSK முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்கள்ல 176/5 ரன்கள் அடிச்சாங்க. Shivam Dube (50 ரன்கள்) மற்றும் Ravindra Jadeja (53 ரன்கள்) ஆகியோர் அரைசதம் அடிச்சாங்க. Ayush Mhatre (32 ரன்கள்) மட்டுமே ஆரம்பத்தில் உதவினார், ஆனால் நடு ஓவர்கள்ல அணி சற்று தடுமாறியது. MS Dhoni 4 ரன்களுக்கு ஆஃப் ஆனது ரசிகர்களுக்கு ஏமாற்றமா இருந்தது. MI-வின் பவுலர்களான Jasprit Bumrah (2 விக்கெட்டுகள்) மற்றும் Deepak Chahar ஆகியோர் திட்டமிட்டு பந்துவீசி CSK-ஐ 180 ரன்களுக்கு கீழே கட்டுப்படுத்தினாங்க.

MI-க்கு 177 ரன்கள் வெறும் 15.4 ஓவர்கள்ல 1 விக்கெட் இழப்புக்கு அடித்து வெற்றிப் பெற்றுச்சு. இதுக்கு முக்கிய காரணம் Rohit Sharma (76* ரன்கள்) மற்றும் Suryakumar Yadav (68* ரன்கள்) இவர்களோட அபாரமான பார்ட்னர்ஷிப். இவர்கள் 114 ரன் பார்ட்னர்ஷிப் செய்து MI-வை வெற்றிக்கு அழைச்சுப் போனாங்க. Rohit ஆரம்பத்தில் தன் அனுபவத்தை வெளிப்படுத்தி, Suryakumar அதிவேகமா ரன்கள் அடித்து ஆட்டத்தை கட்டிப்போட்டார். CSK-வின் பவுலர்கள், குறிப்பாக Noor Ahmad மற்றும் Matheesha Pathirana-வை கடுமையா அட்டாக் பண்ணாங்க. இதுல கடைசி வரை சென்னையால மீண்டு வரவே முடியல.

CSK இப்போ IPL 2025 பாயிண்ட்ஸ் டேபிள்ல கடைசியா (10-வது இடம்) இருக்கு. 8 போட்டிகள்ல 2 வெற்றி மட்டுமே கிடைச்சு, 4 பாயிண்ட்ஸ் இருக்கு. அதுவும், Net Run Rate (NRR) -1.392னு மிகவும் குறைவு, இது மற்ற அணிகளை விட மோசமான நிலையை காட்டுது. நேற்று, Wankhede Stadium-ல MI-விடம் வாங்கிய மரண அடியை மறக்க ஒரு யுகமே ஆகும். Rohit Sharma (76*) மற்றும் Suryakumar Yadav (68*) மாதிரி பேட்ஸ்மேன்கள் அவங்களை அடியோடு துவம்சம் பண்ணிட்டாங்க. MS Dhoni-வோட தலைமையில இந்த தோல்வி, அணியோட நம்பிக்கையை குலைய வச்சிருக்கு.

எவ்வளவு பாயிண்ட்ஸ் தேவை?

பிளே ஆஃப்ஸுக்கு முதல் 4 இடங்களை பிடிக்கனும்னா பொதுவா 14-16 பாயிண்ட்ஸ் தேவைப்படும். கடந்த வருஷம் (2024-ல்) Royal Challengers Bengaluru (RCB) 14 பாயிண்ட்ஸோட 4-வது இடத்தை பிடிச்சு போனாங்க. இப்போ CSK-வுக்கு 4 பாயிண்ட்ஸ் இருக்கும்போது, மீதமுள்ள 6 போட்டிகள்ல குறைந்தபட்சம் 5-6 வெற்றி வாங்கி 14-16 பாயிண்ட்ஸ் அடையணும். இது சாத்தியமா? ஆமாம், ஆனா மிகவும் கஷ்டமான வழி தான்!

CSK-வுக்கு அடுத்து 6 போட்டிகள் - Sunrisers Hyderabad (Home), Punjab Kings (Home), Royal Challengers Bengaluru (Away), Kolkata Knight Riders (Away), Rajasthan Royals (Home), Gujarat Titans (Away). இதுல 3 போட்டி Home-ல , 3 போட்டி Away-ல. CSK-வுக்கு இப்போ இருக்குற ஒரே வழி, இந்த 6 போட்டிகளையும் வெல்லணும்! இதுக்கு 12 பாயிண்ட்ஸ் கூடுதலா கிடைக்கும், இதனால் மொத்தம் 16 பாயிண்ட்ஸ் ஆகும். இது பிளே ஆஃப்ஸுக்கு போதுமானது. ஆனா, NRR-ஐ மேம்படுத்தணும், ஏன்னா -1.392னு உள்ள குறைவான NRR-ஐ உயர்த்தி, மற்ற அணிகளை விட மேல இருக்கணும்.

குறிப்பா, CSK-வுக்கு பெரிய மார்ஜின்ல வெற்றி தேவை — அதாவது, எதிரணியை குறைவான ரன்களுக்கு அவுட் பண்ணனும், அதை விரைவாக சேஸ் பண்ணனும். அதேபோல், அதிக ரன்கள் அடித்து பெரிய டார்கெட் கொடுத்து, அதிக ரன்கள் வித்தியாசத்தில் சுருட்டி வெற்றிப் பெறணும். இதுக்கு Dhoni மற்றும் Jadeja பழைய ஃபார்முக்கு வரணும். Shivam Dube வந்த உடனேயே அடிக்கத் தொடங்கணும். முதல்ல பயப்படக் கூடாது.

பாயிண்ட்ஸ் டேபிள் படி, முதல் 4 இடத்துல Gujarat Titans (10 பாயிண்ட்ஸ்), Delhi Capitals (10 பாயிண்ட்ஸ்), Punjab Kings (10 பாயிண்ட்ஸ்), Royal Challengers Bengaluru (10 பாயிண்ட்ஸ்) இருக்காங்க. இந்த அணிகள் இன்னும் சில வெற்றிகள் பெற்றால், ஈஸியா பிளே ஆஃப் போயிடுவாங்க. RCB மாதிரி கடந்த வருஷம் 7 தோல்விகளுக்கு பிறகு 6 தொடர் வெற்றிகள் பெற்று பிளே ஆஃப்ஸுக்கு போனதை பார்க்கும்போது, CSK-க்கும் ஒரு சின்ன நம்பிக்கை இருக்கு.

CSK-வுக்கு மிகப்பெரிய சவால் NRR-ஐ உயர்த்துறது. கடந்த போட்டிகள்ல பேட்டிங் மற்றும் பவுலிங் சரியா இல்லாததால் இந்த நிலை வந்துருக்கு. MI-விடம் Jadeja 53 ரன்களும் Dube 50 ரன்களும் அடிச்சாலும், பவுலர்கள் Rohit மற்றும் Suryakumar-வை கட்டுப்படுத்த முடியல.

CSK-வுக்கு இன்னும் வாய்ப்பு இருக்குன்னு சொல்றது சற்று ஆச்சர்யமானது, ஆனா முடியாத காரியமில்ல. 6 வெற்றிகள் ஜெயிச்சு , NRR-ஐ சரி பண்ணினா, பிளே ஆஃப்ஸ் வாய்ப்பு கிடைக்கலாம். குறிப்பா Chepauk-ல இனி வரும் 3 போட்டிகளிலும் கட்டாயம் ஜெயிச்சே ஆகணும். Dhoni-வோட அனுபவமும், அணியோட உறுதியும் இதை சாத்தியப்படுத்தலாம். ஆனா, மற்ற அணிகள் வெற்றி பெறாமல் இருக்கணும், இது CSK-வுக்கு சாதகமா இருக்கணும். இவ்வளவும் நடந்தா ஏதாவது அதிசயத்தை யோசித்துப் பார்க்கலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com