க்ரைம்

கழுத்தறுத்து பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுவன்.. ஆக்ட்டிங் டிரைவர் செய்த அதிர்ச்சி சம்பவம்.. மகனுக்கு எமனான தந்தையின் பணம்!

டியூஷன் முடித்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிஷித்தை குருமூர்த்தியும் கோபாலகிருஷ்ணனும் சேர்ந்து கடத்தி

Mahalakshmi Somasundaram

பெங்களூர் மாவட்டம், அரகெரியில்  உள்ள சாந்திநிகேதன் லே அவுட்டில் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்தவர் 12 வயதான நிஷித் என்ற சிறுவன். இவரது தந்தை கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். நிஷித்தின் தந்தையிடம் தற்காலிக  கார் ஓட்டுநராக குருமூர்த்தி பணிபுரிந்து வந்துள்ளார் அவ்வப்போது நிஷித்தின்  வீட்டிற்கு செல்லும் குருமூர்த்தி அவர்களிடம் இருந்த பணத்தையும் நகையையும் பார்த்து அதை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என நினைத்துள்ளார். 

அதன்படி தன்னுடன் கோபாலகிருஷ்ணன் என்பவரை கூட்டு சேர்த்து கொண்ட குருமூர்த்தி நிஷித்தை கடத்தி வைத்துக் கொண்டு அவரது தந்தையை மிரட்டி பணம் பறிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த புதன்கிழமை அன்று டியூஷன் முடித்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிஷித்தை குருமூர்த்தியும் கோபாலகிருஷ்ணனும் சேர்ந்து கடத்தி யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். வெகுநேரமாகியும் நிஷித் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள் நிஷித்தை தேடு வந்துள்ளனர். 

நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் பெற்றோர்களை இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அப்போது நிஷித்தின் தந்தைக்கு போன் செய்த குருமூர்த்தி உன் “உன் பையன உயிரோட பாக்கனும்னா 5 லட்சம் பணம் எடுத்துட்டு வா” என கூறியுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட நிஷித்தின் பெற்றோர்களை அவர்கள் சொன்னது போல 5 லட்சம் பணத்துடன் நிஷித்தை மீட்க தயாராக இருந்துள்ளனர். இதற்கிடையே காவல் நிலையத்திற்கு வந்த போன் காலில் யாரோ ஒருவர் “மலை மேல் உள்ள காட்டு பகுதியில் பள்ளி உடையில் ஒரு சிறுவன் இறந்து கிடக்கிறான்” என தகவல் தெரிவித்துள்ளார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்டிருப்பது காணாமல் போன நிஷித் என்பதை உறுதி செய்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் நிஷித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நிஷித்தை கடத்தி சென்றது அவரது வீட்டில் பணிபுரிந்த குருமூர்த்தி என்பதை அறுபது கொண்ட போலீசார் குருவை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். தற்போது குருமூர்த்தி மற்றும் அவரது கூட்டாளியான கோபாலகிருஷ்ணன் சுட்டு பிடித்த போலீசார் அவர்களிடம் கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். 

பள்ளி படிக்கும் சிறுவன் கடத்தி, கழுத்தறுத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுட்டு பிடிக்க பட்ட குருமூர்த்தி மற்றும் கோபாலகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.