
கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்தில் ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறம் அமர்ந்து தாய் ஒருவர் தனது ஒன்பது வயது மகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தார் அப்போது பேருந்து ஓட்டுநரான ஞானவேல் தாயுடன் அசந்து தூங்கி கொண்டிருந்த சிறுமியை வெகு நேரமாக கவனித்து கொண்டு இருந்துள்ளார்.
சேலம் அருகே உள்ள தலைவாசல் பகுதியில் பேருந்து வந்த போது, ஓட்டுநர் ஞானவேல் என்பவர்,பேருந்தை உணவு இடைவேளைக்கு நிறுத்தியுள்ளார். சில பயணிகள் பேருந்தை விட்டு உணவருந்த சென்ற நிலையில் சில பயணிகள் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது தத் தாயுடன் தூங்கி கொண்டிருந்த 9 வயது சிறுமியின் அருகில் சென்ற ஓட்டுநர் சிறுமியின் உள்ளாடையை நீக்கி, தனது மொபைலில் சிறுமியை புகைப்படம் எடுத்ததாக தெரியவந்தது.
இந்த செயலை கவனித்த பேருந்தில் இருந்த சக பயணிகள் ஞானவேலை தட்டி கேட்டுள்ளனர். தான் அவ்வாறு செய்யவில்லை என ஞானவேல் அனைவரிடத்திலும் வாக்குவாதம் செய்து பிரச்சனை செய்துள்ளார். இந்நிலையில் பேருந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை அடைந்ததும், சிறுமியின் தாய் மற்றும் சக பயணிகள் இணைந்து புறநகர் காவல் நிலையத்தில் சிறுமிக்கு நடந்ததை சொல்லி புகார் கொடுத்தனர்.
புகாரை பெற்ற போலீசார் பேருந்து ஓட்டுநர், சிறுமியின் தாய் மற்றும் சில பயணிகளை விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஞானவேல் சிறுமியை ஆபாசமாக படம் எடுத்தது உறுதியாகியுள்ளது. இதையடுத்து ஞானவேலை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
சிறுமிக்கு நடந்த இந்தச் சம்பவம் பேருந்தில் பயணித்த பயணிகள் மற்றும் விழுப்புரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஞானவேலின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.