
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் 37 வயதான ஜோசப் ஜெய்சிங். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுசீலா என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவரும் அஞ்சுகிராமம் பகுதியில் வசித்து வந்த நிலையில் சுசீலாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டர் வேலை கிடைத்துள்ளது.
இதனால் அஞ்சுகிராமம் பகுதியில் தண்ணீர் கேன் வியாபாரம் பார்த்து வந்த ஜோசப் ஜெய்சிங் தனது வியாபாரத்தை கைவிட்டு மனைவியின் வேலை காரணமாக மனைவியுடன் வில்லுக்குறி பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். கடந்த பத்து நாட்களுக்கு முன் மனைவி சுசீலா அவரது பணி பயிற்சிக்காக வெளியூர் சென்றதால் ஜோசப் ஜெய்சிங் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜோசப் ஜெய்சிங் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் தனது மனைவி சுசீலாவை செல்போனில் தொடர்பு கொண்டு “எனது காதில் நீ அழைப்பது போன்றே கேட்கிறது எனக்கு தனியாக இருக்க பிடிக்கவில்லை” என கூறி செல்போனை துண்டித்ததாக கூறப்படுகிறது,
இதையடுத்து சுசீலா தனது கணவரை செல்போனில் தொடர்பு கொள்ள பல முறை முயற்சி செய்துள்ளார். ஆனால் ஜோசப் ஜெய்சிங்கை தொடர்பு கொள்ள முடியவில்லை, எனவே தனது உறவினர்களை வீட்டுக்கு அனுப்பி பார்க்க கூறியுள்ளார் உறவினர்கள் வீட்டில் சென்று பார்த்த போது ஜோசப் ஜெய்சிங் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சனிக்கிழமை வெளியூரில் இருந்து வில்லுக்குறி வந்த சுசீலா தனது கணவர் மாயமானது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தார், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜோசப் ஜெய்சிங்கை போலீசார் தேடி வந்த நிலையில், சுங்கான்கடை பகுதியில் உள்ள குளத்தில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து சுங்கான்கடை பகுதிக்கு சென்ற இரணியல் போலீசார் குளத்தில் மமிதந்து கொண்டிருந்த ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் மாயமான ஜோசப் ஜெய்சிங் மனைவி சுசீலாவை அழைத்து விசாரணை நடத்தியதில் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆண் சடலம் ஜோசப் ஜெய்சிங் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து தற்கொலை வழக்கு பதிவு செய்த இரணியல் போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்றும் அதற்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிணற்றில் மிதந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.