க்ரைம்

ஏ.டி.எம் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி!!!

Malaimurasu Seithigal TV

செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கரூர் வைசியா ஏ.டி.எம் மையம் உள்ளது. ஏடிஎம் உள்ள சென்ற மர்ம நபர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அலாரம் சத்தம் அடித்துள்ளது.

சுதாரித்து கொண்ட கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். நீண்ட நேரம் அலாரம் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் செங்கல்பட்டு தாலுகா போலீசார்க்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்க்கு சென்ற செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் ஏ.டி.எமை சோதனை செய்ததில் ஏ.டி.எம் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக உடைத்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் குற்றவாளியின் தடயங்களையும் சேகரித்து சென்றுள்ளனர்.

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் 24 மணி நேரமும் வாகனங்கள் வந்து செல்லும் பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்கும் போது அலாரம் சத்தம் ஒலித்ததால் பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது.