minor girl alleges abuse 
க்ரைம்

"மகளை கொடூரமாக சீரழித்த தந்தை" - நிர்வாணமாக புகைப்படம் எடுத்த தாய்! ஆண் நண்பருடன் பேசியதற்காக இப்படியா? கதறும் 14 வயது சிறுமி

கோபமடைந்த அந்த சிறுமியின் தந்தை, சிறுமியைத் தாக்கி வீட்டிற்குள் பூட்டி வைத்ததாகக் கூறப்படுகிறது.

Vinvizhi Leninton

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோர் தன்னைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தாக்கியதாகவும், வீட்டில் அடைத்து வைத்தது சித்திரவதை செய்ததாகவும், நிர்வாணப் புகைப்படங்கள் எடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தச் சிறுமி தனது பெற்றோர் மற்றும் மூன்று சகோதரிகளுடன் அஞ்சார் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த குடும்பம் பூர்வீகமாக வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், சுமார் ஆறு ஆண்டுகளாக குஜராத்தில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகாரின்படி, ஒரு ஆண் நண்பருடன் நட்பு கொண்டதன் காரணமாக, பெற்றோர்களால் தொடர்ச்சியாக தாக்கப்பட்டதாகவும், வீட்டில் அடைத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டதை அடுத்து, அந்த 14 வயது சிறுமி காவல்துறையினரை தொடர்பு கொண்டதன் பெயரில் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 14 அன்று, ஆக்ராவைச் சேர்ந்த ஒரு ஆண் நண்பருடன் அந்த சிறுமி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளார். ​​அதை அந்த சிறுமியின் தாய் பார்த்துள்ளார். இதனையடுத்து, அந்த அழைப்பு குறித்து சிறுமியிடம் விசாரித்ததாக அச்சிறுமி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். புகாரின்படி, சிறுமியின் தந்தை வேலையிலிருந்து திரும்பியதும் ​​அவரது தாய், மகள் ஒரு பையனுடன் பேசி வருவதாகவும், அவனுடன் காதல் உறவில் இருப்பதாகவும் அவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த சிறுமியின் தந்தை, சிறுமியைத் தாக்கி வீட்டிற்குள் பூட்டி வைத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், சிறுமிக்கு உணவும், தண்ணீரும் மறுக்கப்பட்டதாகவும், பல மணி நேரம் தொடர்ச்சியாக இரக்கமின்றி தாக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்தடுத்த நாட்களில், சிறுமியின் தாய் கண்முன்னாலேயே, அவரது தந்தை வீட்டில் வைத்து பலமுறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் அச்சிறுமி குற்றம் சாட்டியுள்ளார். சிறுமியின் புகாரின்படி, அவர் மீண்டும் மீண்டும் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டு, உடல் ரீதியான துன்புறுத்தலுக்கும் ஆளானதாக தெரிவித்துள்ளார். மேலும், கடந்த செப்டம்பர் 20 மற்றும் செப்டம்பர் 29 ஆகிய தேதிகளிலும் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்ததாக சிறுமி காவல்துறையினரிடம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனையடுத்து, செப்டம்பர் 29 அன்று, அதே குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் தனது அத்தை யசோதாபென்னின் வீட்டிற்குச் சென்று, அந்த சிறுமி அத்தையின் கைபேசியிலிருந்து அவசர உதவி எண்ணை அழைத்ததாகக் கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் வந்த சிறுமியின் பெற்றோர் கைபேசியைப் பறித்துக்கொண்டு சிறுமியை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் சென்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதன் பிறகு, அவர் மீண்டும் வீட்டிற்குள் பூட்டி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், அக்டோபர் 1-ம் தேதி, தனது தாய் முன்னிலையிலேயே சிறுமியின் தந்தை அவரை மீண்டும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் அந்த தாக்குதலின் போது சிறுமியின் தாய் அவரை நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்ததாகவும் சிறுமி திடுக்கிடும் குற்றசாட்டுகளை கூறியுள்ளார்.

மறுநாள் காலை, சிறுமியின் தந்தை வேலைக்குச் சென்ற பிறகு, அவர் தன் அத்தையின் வீட்டிற்குச் சென்று, தனக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் அனைத்து துன்புறுத்தலையும் அவரிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அந்த சிறுமி மீண்டும் காவல்துறை உதவி எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார்.

சிறுமியின் புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரது பெற்றோரை காவலில் எடுத்து விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். சிறுமியின் புகார்களின் அடிப்படையில், போக்சோ சட்டம் மற்றும் அது தொடர்பான பிற சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அந்தச் சிறுமி அதிகாரிகளின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்