Jeffrey Dahmer serial killer 
க்ரைம்

15-க்கும் மேற்பட்ட ஆண்கள் கொலை.. சடலத்துடன் உடலுறவு கொண்ட நபர்! இத்தனை வருடம் ஆயுள் தண்டனையா? உலகையே நடுங்க வைத்த கொலை வழக்கு

ஜெஃப்ரி அதிகமாகக் குடிக்கத் தொடங்கிய அந்த சமயத்தில்தான் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதையும் அவர் உணர்ந்துள்ளார்.

Vinvizhi Leninton

ஜெஃப்ரி டாமர் ஒரு தொடர் கொலைகாரன் குறைந்தது 17 பேரைக் கொலை செய்து அவர்களின் உடல்களை துண்டுகளை வெட்டியுள்ளார். கொலை செய்ததில் அனைவரும் ஆண்கள் அல்லது பதின்வயது சிறுவர்களாகவே இருந்தனர். கொலை செய்த ஆண்களை அவர்களின் சடலத்தினோடு ஜெஃப்ரி உடல்களைத் துண்டாக்குவதற்கு முன்பு, சவப்புணர்ச்சி மற்றும் நரமாமிசம் உண்ணுதல் போன்ற அதிர்ச்சியூட்டும் செயல்களில் ஈடுபட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. 1970-களின் பிற்பகுதியிலிருந்து 1991-ல் அவன் கைது செய்யப்படும் வரை, டாமரின் கொடூரமான கொலைகள் பெரும்பாலும் கண்டறியப்படாமலேயே இருந்தது.

ஜெஃப்ரியின் குழந்தை பருவம் மிகவும் சிக்கலானதாகவே இருந்துள்ளது. உயர்நிலை பள்ளியில் படிக்கும்போது ஜெஃப்ரிக்கு சில நண்பர்கள் மட்டுமே இருந்தனர். தனிமையில் அதிகமாக இருந்ததால் ஜெஃப்ரி அதிகமாகக் குடிக்கத் தொடங்கியுள்ளார். மேலும், அந்த சமயத்தில்தான் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதையும் அவர் உணர்ந்துள்ளார். 1978-ல் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த சிறிது காலத்திலேயே, ஜெஃப்ரி தனது பாலியல் உந்துதல்களின்படி செயல்பட்ட விதம், பல மரணங்களை நிகழ்த்தியது.

1978-ம் ஆண்டு ஜூன் மாதம், ஓஹியோவின் பாத் நகருக்கு அருகில், ஸ்டீவன் ஹிக்ஸ் என்ற 18 வயது வழிப்போக்கரை ஜெஃப்ரி தன் வாகனத்தில் ஏற்றி உதவுவதாக கூறியுள்ளார். இதனையடுத்து, ​​ஜெஃப்ரி அவரை ஒரு டம்பில்ஸால் பலமாகத் தாக்கியுள்ளார். பின்னர் அவரது சடலத்தைத் துண்டு துண்டாக வெட்டி, உடல் பாகங்களை அமிலத்தில் கரைத்து, அனைத்து ஆதாரங்களையும் அருகிலுள்ள காட்டில் அப்புறப்படுத்தியுள்ளார். இதுதான் ஜெஃப்ரிக்கு முதல் கொலையாக அமைந்தது. பின்னர், ஜெஃப்ரி கல்லூரியில் தனது குறுகிய காலப் படிப்பு மற்றும் அமெரிக்க இராணுவத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியதற்கு பிறகு அளவுக்கு அதிகமாக மதுவிற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில், ஜெஃப்ரி 1981ல் மில்வாக்கிக்கு அருகிலுள்ள தனது பாட்டியுடன் வசிப்பதற்காக விஸ்கான்சினுக்கு சென்றுள்ளார்.

எந்த வேலையிலும் நீண்ட காலம் நீடிக்க முடியாததால் ஜெஃப்ரி, ஓரினச்சேர்க்கையாளர் மதுக்கூடங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கு அடிக்கடி சென்றுள்ளார். ஜெஃப்ரியுடன் பழகியபின்னர் அவர்களை சில காரணங்களை கூறி தன்னுடன் வீட்டிற்கு வருபவர்களுக்கு மயக்க மருந்துகள் கலந்த பானங்களைக் கொடுத்து கொலை செய்துள்ளார். 1987-ல், ஜெஃப்ரி ஒரு மோட்டல் அறையில் ஓர் இளைஞரை கொன்று, சடலத்தைத் தான் தங்கியிருந்த பாட்டியின் வீட்டிற்குக் கொண்டு சென்று, உடலைத் துண்டு துண்டாக வெட்டி, உடல் பாகங்களை அப்புறப்படுத்தி, மண்டை ஓட்டை மட்டும் ஒரு பரிசு கோப்பைபோல சேகரித்து வைத்துள்ளார்.

பின்னர், 1987 முதல் 1991 வரை ஜெஃப்ரி குறைந்தது 15 இளைஞர்களை கொலை செய்து அவர்களின் சடலத்துடன் உடலுறவு செய்து ஆதாரத்தை மறைக்க பல வழிகளை மேற்கொண்டுள்ளார். இந்த நேரத்தில்தான், அவர் கொலை செய்த ஆண்களின் உடல்கள் அழுகிக்கொண்டிருந்த அடித்தளம் மற்றும் வாகன நிறுத்துமிடத்திலிருந்து வந்த துர்நாற்றமும் ஒரு காரணமாக, அவரது பாட்டி ஜெஃப்ரியின் வீட்டை விட்டு வெளியேற்றினார். இதனைத்தொடர்ந்து, 1991ம் ஆண்டு 14 வயது சிறுவன் ஒருவர் ஜெஃப்ரியிடமிருந்து தப்பித்து நிர்வாணமாக இரத்தம் சொட்ட சொட்ட சாலையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர் காவல்துறையினருடன் ஜெஃப்ரி வீட்டிற்கு சென்றபோது,ஜெஃப்ரி அந்த சிறுவனை தனது காதலன் என்று கூறியதால் போலீசார் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதனித்தொடர்ந்து, 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 32 வயதான கறுப்பினத்தவரான டிரேசி எட்வர்ட்ஸ், ஜெஃப்ரியின் கவனத்தைத் திசைதிருப்பி, பின்னர் ஜெஃப்ரியைக் குத்திவிட்டு அந்த குடியிருப்பிலிருந்து வெளியே ஓடினார். அதன் பின்புதான் ஜெஃப்ரி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அங்கு காவல்துறையினரால், பல அழுகிய உடல்கள், உடல் உள்ளுறுப்புகள், வெட்டப்பட்ட தலைகள், பிறப்புறுப்புகள் போன்ற பல பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், அப்போது 31 வயதாக இருந்த டாமர் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் ஆரம்பத்தில் 1991 செப்டம்பரில் குற்றத்தை மறுத்துவந்தார். பின்னர் ஜெஃப்ரியின் ஓஹியோ வீட்டிற்குப் பின்னால் உள்ள காட்டில் புதைக்கப்பட்டிருந்த ஸ்டீவன் ஹிக்ஸின் உடலை அதிகாரிகள் கண்டெடுத்தபோது , ​​அவர்கள் அவர் மீது கூடுதல் குற்றச்சாட்டைச் சுமத்தினர். பின்னர், 1992-ல், ஜெஃப்ரி தனது 15 கொலைகளுக்கான குற்றத்தை ஒப்புக்கொண்டார், ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தனது வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டார்.

இதனையடுத்து, ஜெஃப்ரியின் வழக்கறிஞரான ஜெரால்ட் பாயில், ஜெஃப்ரி "ஒரு தீய மனிதர் அல்ல, அவர் ஒரு மனநோயாளி" என்று குறிப்பிட்டார். ஜெஃப்ரி நரமாமிசம் உண்பதையும், சடலங்களுடன் உடலுறவு கொள்வதையும் ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார். ஆனால், இறந்த உடல்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசை ஒருவருக்கு ஏற்படும் மனநலக் கோளாறான 'நெக்ரோஃபிலியாவால்' ஜெஃப்ரி பாதிக்கப்பட்டிருந்ததே இதற்குக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். ஆனால், ஐந்து மணி நேர ஆலோசனைக்குப் பிறகு, நடுவர் குழுவினர் ஜெஃப்ரியை 15 கொலைக் குற்றங்களில் குற்றவாளி எனக் கண்டறிந்ததுடன், அவர் மனநலம் குன்றாதவர் என்றும், மனநலக் கோளாறால் பாதிக்கப்படவில்லை என்றும் முடிவு செய்து தீர்ப்பு வழங்கினர். அவருக்கு ஆரம்பத்தில் பரோலுக்கு வாய்ப்பில்லாத 15 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன, ஆனால் 1978-ல் நடந்த ஹிக்ஸ் கொலையை அவர் ஒப்புக்கொண்ட பிறகு, 16-வது ஆயுள் தண்டனையும் பின்னர் சேர்க்கப்பட்டது.

கொலையாளி ஜெஃப்ரிக்கு தண்டனைக் காலம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், 34 வயதான ஜெஃப்ரி, சக கைதியான கிறிஸ்டோபர் ஸ்கார்வரால் கொல்லப்பட்டார். ஸ்கார்வர், தங்களது பணிக் குழுவில் இருந்த மற்றொருவரையும் அடித்துக் கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெஃப்ரியையும் மற்றவரையும் கொல்லுமாறு கடவுள் தன்னிடம் கூறியதாக ஸ்கார்வர் கூறினார். ஏற்கனவே கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஸ்கார்வருக்கு, கூடுதல் ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு, அவர் ஒரு கூட்டாட்சி சிறைக்கு அதன் பின்னர் மாற்றப்பட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.