Pregnant woman murder case 
க்ரைம்

"வருங்கால மருமகனுடன் உல்லாசம்.. மகளின் கருவை கொலை செய்த பெற்றோர்" - அதிரவைக்கும் கொலை வழக்கில் பின்னணி என்ன?

ரெபெக்காவின் குழந்தைக்கு உண்மையில் தனது கணவரான பிராட்லிதான் உயிரியல் தந்தை என்றும், அவர்தான் ரெபெக்காவை காருக்குள் ஆசை காட்டி அழைத்துச் சென்று கத்தியால் குத்தினார்

Vinvizhi Leninton

கர்ப்பிணியான தனது மகளைக் கொன்று, அவரது உடலிலிருந்து கருவை எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தாய், தனது மகளின் வருங்காலக் கணவருடன் பாலியல் உறவு கொண்டிருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

41 வயதான கார்ட்னி பார்த்தலோமியோவும் (தாய்), அவரது கணவர் பிராட்லி பார்த்தலோமியோவும் (தந்தை), தனது 22 வயதான மகளான ரெபேக்கா பார்க்கை தங்கள் வீட்டிற்கு ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று, அவரை வாகனத்தில் ஏற்றி சென்று காட்டுக்குள் வைத்து கொலை செய்து, பின்னர் அவரது கருப்பையில் இருந்த பிறக்காத குழந்தையை அகற்றியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம், இந்த பயங்கரமான வழக்கின் ஆரம்பகட்ட விசாரணைக்காக அந்தத் தம்பதியினர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்கள். அந்த விசாரணையின் போது, ​​ரெபெக்காவின் வருங்காலக் கணவரான 43 வயதான ரிச்சர்ட் ஃபார்லர், தான் ரெபெக்காவுடன் பழகத் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவருக்கும் ரெபேக்காவின் தாயாருக்கும் இடையே பாலியல் உறவு இருந்ததாகவும், ஆனால் அது முடிந்துவிட்டதாக கூறியுள்ளார்.

அவர்கள் உறவில் இருந்தபோது, ​​கார்ட்னி தனக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்ற தனது விருப்பத்தைப் பற்றிப் பேசியதாக ஃபார்லர் தெரிவித்துள்ளார். ஆனால், அவரால் பெற்றுக்கொள்ள முடியாத நிலையை பற்றியும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஃபார்லர், ரெபேக்கா காணாமல் போவதற்கு முந்தைய நாட்களைப் பற்றிப் பேசியுள்ளார். அவர் ரெபேக்காவை தொடர்புகொள்ள பலமுறை முயற்சி செய்ததாகக் தெரிவித்துள்ளார்.

மேலும், ரெபேக்கா காணாமல் போவதற்கு முந்தைய நாள் இரவு அவருக்கு பனிக்குடம் உடைந்துவிட்டதாகவும், தம்பதியினரை ஒரு நண்பர் மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, ​​கார்ட்னி தலையிட்டு, ரெபேக்காவைத் தனது காரில் அழைத்துச் செல்வதாகக் கூறியதாகவும் ஃபார்லர் தெரிவித்துள்ளார்.

மேலும் மறுநாள் இரவு, ரெபெக்காவின் பாட்டியிடமிருந்து கிடைத்த பரம்பரைச் சொத்தின் ஒரு பகுதி எனக் கூறி, கார்ட்னி அவருக்கு $18,000 மதிப்புள்ள காசோலையின் புகைப்படத்தை அனுப்பி, ரெபெக்காவைத் தன் வீட்டிற்கு வரவழைத்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ரெபேக்கா, அவரது பிரசவத் தேதிக்கு மூன்று நாட்கள் கழித்து, நவம்பர் 25-ம் தேதி, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை விட கொடூரமான நிகழ்வாக அவரது ஆண் குழந்தையின் உடல் எச்சங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் கார்ட்னி, தனது மகளின் மரணத்திற்கும் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பின்னர் அவர் தனது வாக்கு மூலத்தை மாற்றி தெரிவித்துள்ளார். அதாவது, ரெபெக்காவின் குழந்தைக்கு உண்மையில் தனது கணவரான பிராட்லிதான் உயிரியல் தந்தை என்றும், அவர்தான் ரெபெக்காவை காருக்குள் ஆசை காட்டி அழைத்துச் சென்று கத்தியால் குத்தினார் என்றும் அதிரவைக்கும் விஷத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், ரெபேக்கா உயிருடன் இருந்தபோதே, பிராட்லி அவரது கழுத்தில் கத்தியை வைத்திருக்க, கார்ட்னி அறுவைக் கத்தியைப் பயன்படுத்தி குழந்தையை அவரது கருப்பையிலிருந்து எடுத்ததாகக் கூறியுள்ளார். ஆனால், குழந்தை உயிர் பிழைக்கவில்லை என்றும், அந்த பிஞ்சு உயிரை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதாகவும் கார்ட்னி புலனாய்வாளர்களிடம் வாக்கு மூலமாக தெரிவித்துள்ளார்.

மேலும், கார்ட்னிக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், ஆனால் அவரால் கருத்தரிக்க முடியாததால், ரெபேக்காவை கொலை செய்யமாறு யோசனையை அவர் வழங்கியதாகவும் பிராட்லி தனது பேட்டியில் கூறியதாகக் கூறப்படுகிறது. பிராட்லி பதிவுசெய்யப்பட்ட பாலியல் குற்றவாளி என்பதால், அந்தத் தம்பதியினரால் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடியாத சூழல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கார்ட்னி மற்றும் பிராட்லி ஆகிய இருவர் மீதும் கொடூரக் கொலை, சித்திரவதை, சித்திரவதை செய்ய சதி செய்தல், கருச்சிதைவு, கர்ப்பிணிப் பெண் மீது தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இருவர் மீதும் பதியப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது, அவர்களுடைய முதற்கட்ட விசாரணை வருகின்ற நவம்பர் 9-ம் தேதி தொடரவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்